இதெல்லாம்... எங்க அண்ணன் சொல்லிக் கொடுத்த நடிப்பு: தனுஷ்
சென்னை: சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற நடிகரான தனுஷ், தற்போது தமிழிலும் ஹிந்தியிலும் செம பிஸியோ பிஸி. வடக்கே, ஹிந்தியில் ராஞ்ச்னா வெற்றிகரமாக ஓடி, வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்க, தெற்கே தமிழில் மரியான் ரிலீசாகி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், மரியான் பட இயக்குநர் பரத் பாலாவும், தனுஷும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்களுடன் உரையாற்றினர். ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக அதேசமயம் மனம் திறந்து பதிலுரைத்தார் தனுஷ்.
நிகழ்ச்சியில் ஒரு ரசிகர், 'உங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தது யார் ? எனக் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தனுஷ்...

அண்ணன் தான் காரணம்...
என் அண்ணன் செல்வராகவன் தான் நடிப்பு பற்றி எனக்குச் சொல்லிக் கொடுத்தார். கேமரா முன்பு பயமில்லாமல் எப்படி நடிக்க வேண்டும் என்பது அவர் சொல்லிக் கொடுத்ததே...

உணார்ச்சிகளை வெளிப்படுத்தும் வித்தை...
உணர்ச்சிகளை, பாவங்களை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என அவரிடம் தான் கற்றுக் கொண்டேன்.

நடிப்பின் பன்முகங்கள்...
அதேசமயம், அடுத்தடுத்து எனக்கு அமைந்த வாய்ப்புகள் என் அதிர்ஷ்டம். இயக்குநர் பாலு மகேந்திரா, வெற்றிமாறன் மற்றும் பரத்பாலா போன்றோர் மூலம் நடிப்பின் பன் முகங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.

காமெடியை கற்றுத் தந்தவர்கள்...
இயக்குநர்கள் சூரஜ், சுப்ரமணிய சிவா மற்றும் பூபதி பாண்டியன் போன்றோரால் தான் எனக்குள் இருந்த நகைச்சுவை நடிகன் உலகிற்கு தெரிய வந்தான்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே...
சரியான் நேரத்தில் சரியான இயக்குநர்களின் படங்களில் நடிக்க வைத்த கடவுளுக்கு என் நன்றிகள். எல்லாம் கடவுளின் ஆசிர்வாதம் ‘ என வெளிப்படையாக பேசினார் தனுஷ்.


Click it and Unblock the Notifications