விஜய், தனுஷ் ரொம்ப பிடிக்கும்... ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பு அற்புதம் - மெய் ஹீரோ நிக்கி சுந்தரம்
Recommended Video
சென்னை: நியூயார்க் நகரில் பிறந்து வளர்ந்தாலும் தமிழ் சினிமா மீதுள்ள ஆசையினால் மெய் என்ற படத்தில் நடித்து முடித்து விட்டு ரிலீஸ்க்காக காத்துக்கொண்டிருக்கிறார் ஹீரோ நிக்கி சுந்தரம். பிறந்ததுதான் நியூயார்க் என்றாலும் சென்னை ஒன்றும் புதிதல்ல கோடை விடுமுறை, டிசம்பர் மாத விடுமுறை நாட்களில் ஓடி விளையாடிய இடம் சென்னைதானாம் நிக்கி சுந்தரத்திற்கு. தமிழ் சினிமா மீது ஆசை ஏற்பட்டது எப்படி பிடித்த ஹீரோ, படங்கள் என அமெரிக்க ஆங்கிலம் கலந்த தமிழில் நம்மிடையே பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
நியூயார்க் பிறந்து வளர்ந்தேன். அம்மா, தாத்தா சென்னைதான் என்பதால் கோடை விடுமுறை, டிசம்பர் மாதங்களில் சென்னைக்கு வருவேன். சின்ன வயதில் இருந்து சினிமா ஆசை. தனுஷ் விஜய் ரொம்ப பிடிக்கும்.

சிறு வயதிலேயே ரோஜா படம் பார்த்து பிடித்துப்போனது. கில்லி, காதல் கொண்டேன் பார்த்து ரசித்த படங்கள், சிறு வயதிலேயே பள்ளிகளில் படிக்கும் போது மேடை நாடகங்களில் நடித்திருக்கிறேன், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன்.
மெய் படத்தில் என்னுடன் வேலை செய்தவர்கள் ரொம்ப திறமைசாலிகள். ஐஸ்வர்யா ராஜேஸ் திறமையான நடிகை. அவர் நடித்த காக்கா முட்டை படத்தை பார்த்திருக்கிறேன். அருமையாக நடித்திருந்தார். இந்த படத்திலும் எனக்கு பல காட்சிகளில் உதவி செய்தார்.

இயக்குநர் பாஸ்கரன் அற்புதமாக படத்தை இயக்கி இருக்கிறார். தொழில் நுட்ப கலைஞர்கள் பலரும் திறமையாக வேலை செய்துள்ளனர். உலகம் முழுவதும் இன்றைக்கு நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் எடுத்திருக்கிறோம் எனவே கண்டிப்பாக இந்த படத்தை தியேட்டரில் வந்து பாருங்க ஆதரவு கொடுங்க என்றார் நிக்கி. நாமும் வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றோம்.
நிக்கி சுந்தரம், பிரபல டிவிஎஸ் நிறுவனத்தின் அதிபர் டி.வி.சுந்தரம் அய்யங்காரின் பேரனாவார்! தொழில் மீது கவனம் இருந்தாலும் சினிமா ஆசை அவரை படம் எடுக்க வைத்து ஹீரோவாக நடிக்க தூண்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











