»   »  "மாரி" நீ போ.. சமந்தா நீ வா... "கும்"மென்று மாறிய தம்பி தனுஷ்!

"மாரி" நீ போ.. சமந்தா நீ வா... "கும்"மென்று மாறிய தம்பி தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாரி பட ஷூட்டிங் முடிந்து விட்டதால் தனது முருக்கு மீசைக்கு சோகத்தோடு பை பை சொல்லியுள்ளார் நடிகர் தனுஷ்.

தனுஷிற்கு இந்த வருடம் அனேகன் மற்றும் ஷமிதாப் என இரண்டு வெற்றிப் படங்களோடு அமோகமாகவே தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து பாலாஜி மோகனின் மாரி படத்தில் நடித்து வந்தார்.


இப்படத்தில் தனுஷுடன் முதன்முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தவாரம் முடிவடைந்தது.


பிரியாணி விருந்து...

பிரியாணி விருந்து...

தூத்துக்குடியில் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்து அமர்க்களமாக படப்பிடிப்பை முடித்தார் தனுஷ். மாரிப் படம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தனுஷ் வேல்ராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கத் துவங்குகிறார்.


இரண்டு ஜோடிகள்...

இரண்டு ஜோடிகள்...

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அனிருத் தான் இசை.


முருக்கு மீசை...

முருக்கு மீசை...

இதனால், மாரி படத்திற்காக வைத்த முருக்கு மீசைக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.


சோகமான தனுஷ்...

சோகமான தனுஷ்...

அதில், தனுஷின் மீசையை இயக்குனர் பாலாஜி மோகன் கத்தியைக் கொண்டு தாடியை எடுக்கப்போவது போலவும், ஆர்ட் டைரக்டர் கிரண் கத்திரியுடன் அவருடைய மீசையை வெட்டப்போவது போலவும், இதனால் தனுஷ் ரொம்பவும் சோகமான முகத்துடன் இருப்பதுபோலவும் உள்ளது.


குறுகிய காலத்தில்...

குறுகிய காலத்தில்...

படப்பிடிப்பு முடிந்த அதே வேகத்தில் ‘மாரி' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துவங்கிவிட்டன. மிகக் குறுகிய காலத்தில் இப்படம் படமாக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
'My last click with #maarimeesai :) will deff miss it' actor Dhanush tweeted.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X