TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
கனவுக் கன்னியை காங்கலையே, அப்புறம் திருமணம் எப்படி?: ஆர்யா
சென்னை: இன்னும் நான் தேடும் கனவுக் கன்னி என் கண்ணில் படவில்லை. அதனால் என் திருமணம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டின் பிசி நாயகர்களுள் ஒருவர் ஆர்யா. கடந்த ஆண்டு அவர் நடித்த சேட்டை, ராஜா ராணி, ஆரம்பம் மற்றும் இரண்டாம் உலகம் ஆகிய படங்கள் ரிலீஸாகின.
இந்த ஆண்டும் அவரது படங்கள் குறைவில்லாமல் ரிலீஸ் ஆகும்.
மீகாமன்
ஆர்யா தற்போது மீகாமன் மற்றும் புறம்போக்கு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் புறம்போக்கு படத்தில் அவருடன் விஜய் சேதுபதியும் நடிக்கிறார்.
ஜாலி பாய்
ஆர்யா என்றாலே நடிகைகளுடன் ஜாலியாக பேசுவார், அவர்களை கலாய்ப்பார் என்று அனைவருக்கும் தெரியும். ஆர்யாவுக்கு மச்சம் தான் பலர் கூறும்படி அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.
நயன்தாரா
ஆர்யாவும், நயன்தாராவும் காதலிப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. இந்நிலையில் நயன்தாராவின் பெயர் தற்போது அவரது முன்னாள் காதலருடன் சேர்ந்து அடிபடுகிறது.
திருமணம்
ஆர்யாவுக்கு திருமணம் எப்பொழுது என்று பலர் கேட்டாலும் அதற்கு பதில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அவர் திருமணம் பற்றி பேசியுள்ளார்.
கேள்விக்குறி
ஆர்யா நினைக்கும் கனவுக் கன்னி இன்னும் அவர் கண்ணில் படவில்லையாம். அத்தகைய கனவுக் கன்னி கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்வாராம். அதுவரை அவரது திருமணம் ஒரு கேள்விக்குறிதானாம்.