என் படத்த 10 நாள் கூட தியேட்டர்ல ஓட விடல.. குமுறும் ஜீவா!

சென்னை : நடிகர் ஜீவா தமிழ் சினிமாவையும் கடந்து பாலிவுட்டிலும் கால் தடத்தைப் பதித்து 86 என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தி உள்ளார்.

தற்போது சுந்தர் சியின் இயக்கத்தில் மீண்டும் இணைந்து புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்

ஆரம்ப காலகட்டத்தில் ராம், கற்றது தமிழில் என பல சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த ஜீவாவின் திரைப்படத்தை பத்து நாள் கூட திரையரங்குகளில் ஓட விடவில்லை என வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.

 டஃப் பாத்திரங்களில்

டஃப் பாத்திரங்களில்

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி செளவுத்ரியின் மகன் ஜீவா தமிழ் சினிமாவில் ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே துறுதுறுப்பான நடிப்பு வெளி காட்டி ரசிகர்களை கவர்ந்த ஜீவா புது நடிகர்கள் யாரும் செய்யத் துணியாத டஃப் பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான ராம் திரைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனாக நடித்து மிகச் சிறந்த நடிகராக பல விருதுகளையும் வென்று இருப்பார்

 சிறந்த நடிகராக

சிறந்த நடிகராக

இதன் பிறகு இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் என்ற படத்தில் பிரபா என்ற கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்திருப்பார். ஜீவா இதுவரை பல திரைப் படங்களில் நடித்திருந்தாலும் கற்றது தமிழ் இன்றும் ரசிகர்களால் பேசப்படும் முக்கிய படமாக இருந்து வருகிறது. ஆரம்பகால நடிகர் இதுபோன்ற படங்களில் நடிப்பது மிகவும் அரிதானது என ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டார். சிறந்த நடிகராக விஜய் அவார்ட்ஸில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 திரையரங்குகளில் ஓடவில்லை

திரையரங்குகளில் ஓடவில்லை

இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் திரைப்படம் 2003ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் வெளியானபோது ரசிகர்களால் அந்த அளவிற்கு கவனிக்கப்படவில்லை. பத்து நாட்கள் கூட திரையரங்குகளில் ஓடவில்லை. என்பதுதான் நிதர்சனமான உண்மை.

 மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில்

மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில்

அதன் பின் ஜீவா முழுவதும் கமர்ஷியல் பார்முலாவுக்கு மாறினார் கமர்சியல் ஹிட்டுகளை கொடுத்தார். கலகலப்பு 2 வெற்றியை தொடர்ந்து மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் ஜெய் என மூன்று ஹீரோக்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றதை அடுத்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து கோல்மால், வரலாறு முக்கியம், மாதவி உள்ளிட்ட படங்களில் ஜீவா தற்போது நடித்து வருகிறார்

Recommended Video

தியேட்டர்களில் வந்தான் 'எதற்கும் துணிந்தவன்': கொண்டாடி தீர்த்த சூர்யா ரசிகர்கள்!
 10 நாள் கூட தியேட்டர்ல ஓட விடல

10 நாள் கூட தியேட்டர்ல ஓட விடல

இந்த நிலையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்தும் கற்றது தமிழ் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கற்றது தமிழ் வெளியான போது அந்த படத்தை யாரும் ஆதரிக்கவில்லை படம் வெளியான 10 நாட்களிலேயே ரீல் பெட்டி ரிட்டன் வந்துவிட்டது. இதேபோலத்தான் ராம் படமும் ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை அந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இப்பொழுது பலரும் இந்த படங்களை டிவியில் பார்த்து விட்டு பாராட்டுகின்றனர். கற்றது தமிழ், ராம் வெளியாகும் போது யாரும் பார்க்கவும் இல்லை பாராட்டவும் இல்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது என ஜீவா பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X