கவுதமியுடன் நான்… முதன் முறையாக மனம் திறந்த கமல்

By Mayura Akilan

கவுதமியின் கவலைகளை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மனதிற்குப் பிடித்த ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதில் எந்த தவறும் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மனைவி சரிகா உடனான பிரிவுக்குப் பின்னர் கவுதமியுடன் இணைந்து வாழ்கிறார் கமல்ஹாசன். இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்கின்றனர்.

இவர்களின் நட்பினைப் பற்றி ஊடகங்களில் பல செய்திகள் வெளியாகியுள்ளன. அதுபற்றி கமல் இதுவரை மனம் திறந்து பதில் கூறியதில்லை முதன் முறையாக கவுதமியுடன் இணைந்து வாழ்வது பற்றி மலையாள பத்திரிகை ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார் கமல்.

சந்தோசத்தை தருகிறேன்

சந்தோசத்தை தருகிறேன்

கவுதமி என் கூடத்தான் இருக்கிறார். அவரது கவலைகளை நான் புரிந்து வைத்திருக்கிறேன். அவருக்கு பாசத்தையும், சந்தோஷத்தையும் நான் தருகிறேன்.

நட்புக்கு அழகு

நட்புக்கு அழகு

தேவைப்படும்போது நட்பை பயன்படுத்திக்கொண்டு பிறகு வேண்டாம் என்று சொல்வது தவறு. அது நல்ல நட்புக்கு அழகில்லை. வேதனையிலும் பங்கெடுக்கும்போதுதான் பந்தம் பலப்படும்.

தவறு எதுவுமில்லை

தவறு எதுவுமில்லை

மனதுக்கு பிடித்த ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் என்ன தவறு இருக்கிறது? விமர்சனம் செய்கிறவர்களுக்கு அது எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். மன ஒற்றுமையோடு சேர்ந்து வாழ்கிறவர்களுக்கு அது சரி என்றால் மற்றவர்கள் அதை ஏன் எதிர்க்க வேண்டும்? என்றார் கமல்.

மார்பகப் புற்றுநோய்

மார்பகப் புற்றுநோய்

ரஜினியின் குரு சிஷ்யன் படத்தில் அறிமுகமான கவுதமி கமலுடன் அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன் போன்ற படங்களில் நடித்துள்ளார். அவரது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது. மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட கவுதமி தற்போது அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் கமல்தான் என்று கவுதமி சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

கமல்தான் வாழ்க்கை

கமல்தான் வாழ்க்கை

கமல் என் வாழ்க்கையின் தூண் என்பதை விட அதை விடவும் மேலானவர் விஸ்வரூபம் படத்தின் போது என்னை அழைத்து இப்படத்தின் காஸ்டியூமராக நீ இருக்கிறாயா என்றார். உடனடியாக சரி என்று சொன்னேன். மீண்டும் அவர் எனக்கு வாழ்வளித்தவர் என்று கூறினார் கவுதமி.

முன்பே அறிவித்த விஜய் டிவி

முன்பே அறிவித்த விஜய் டிவி

கமல் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டு ஆனதை ஒட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவி பாராட்டு விழா நடத்தியது. அதன் முன்னோட்டமாக கமல் எக்ஸ்பிரஸ் பேருந்து தொடக்க விழாவில் கமலின் இளைய மகள் அக்ஷரா, கவுதமியின் வாரிசு சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது விழாக்குழுவினர் கவுதமி மகள் சுப்புலட்சுமியையும் கமலின் வாரிசாகவே அறிவித்தனர். அவரும் கமலின் மகளாகவே நடந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X