என் மகனே என்னை அசிங்கமா பார்க்கிறான்.. ஏன்டா அப்படி நடிச்சோம்னு ஆயிருச்சு!

சென்னை: திரைப்படங்களை தொடர்ந்து வெப்சீரிஸ்களிலும் நடிகர் சரத்குமார் இப்பொழுது கலக்கி கொண்டுள்ளார்

ஹீரோவாக நடித்து வரும் அதே சமயம் அப்பா வேடங்களிலும்,வில்லன் கதாபாத்திரங்களிலும் நடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்

இந்த நிலையில் தான் நடித்த ஒரு பாடலை தனது மகன் இன்று வரை பார்த்துவிட்டு திட்டுவதாக கூறியுள்ளார்.

வெள்ளிவிழா கொண்டாடின

வெள்ளிவிழா கொண்டாடின

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின் ஹீரோவாக நிலைத்து நின்ற நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சரத்குமார் ஆரம்ப காலகட்டத்தில் சில படங்களில் வில்லனாக நடித்த பின் படிப்படியாக சிறு சிறு வேடங்களில் நடித்து ஹீரோவாக உருவானார். இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெள்ளிவிழா கொண்டாடின. அதில் மிக முக்கியமாக சூரிய வம்சம், நாட்டாமை படங்கள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் மிகச் சிறந்த படங்களாக உள்ளன

அதே இளமையுடன்

அதே இளமையுடன்

கம்பீரமான தோற்றம் மிரட்டலான குரல் வளம் பார்த்தவுடனே வசீகரிக்கும் முகம் என அனைவருக்கும் பிடித்த மிகச் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சரத்குமார் இன்றும் அதே இளமையுடன் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக நடித்து வரும் அதேசமயம் அப்பா கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கால மாற்றத்திற்கு ஏற்ப திரைப்படங்களுக்கு இணையாக வெப் சீரிஸ்களும் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அந்த வகையில் சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான இரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஏய்

ஏய்

தமிழ் சினிமாவில் அதிக ஹிட்டுகளை கொடுத்த கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஏ வெங்கடேஷ். விஜய்,சிம்பு,அருண் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகருடன் இணைந்து பணியாற்றி உள்ளார். சரத்குமார் நடிப்பில் வெளியான ஏய் படத்தையும் இயக்கி இருப்பார். வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடிகை நமீதா நடித்திருப்பார்.

Recommended Video

SJ Suryah, Nikki Kalrani in Aha OTT app Grand launch in Tamil |Allu Arjun, Allu Aravind
தண்ணீரை உறிஞ்சி

தண்ணீரை உறிஞ்சி

ஏய் படம் எந்த அளவிற்கு சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோ அதே அளவுக்கு இந்த படத்தில் அர்ஜுனா அர்ஜுனா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது. கொட்டும் அருவியில் சொட்டச் சொட்ட நனைந்தபடி நமிதா மற்றும் சரத்குமார் ரொமான்டிக்காக நடித்துள்ள இந்த பாடல் மிகவும் வித்தியாசமாக எடுக்கப்பட்டிருக்கும். கவர்ச்சி சற்று தூக்கலாகவே உள்ள இந்த பாடலில் சரத்குமார் நமீதாவின் தொப்புளில் இருந்து தண்ணீரை உறிஞ்சி எடுப்பார்.

மகனே அசிங்கமாக

மகனே அசிங்கமாக

இந்த பாடல் ஒவ்வொரு முறை டிவியில் ஒளிபரப்பு ஆகும் போதும் சரத்குமாரின் மகன் ஏன்பா இப்படியெல்லாம் நடிக்கிறிங்க. இந்த பாடல் எடுக்கும் பொழுதே சரத்குமார் இயக்குனர் வெங்கடேஷ் இடம் தொப்புளில் தண்ணீர் எடுக்கும் காட்சி மட்டும் வேண்டாம் எனக் கூறியுள்ளார் ஆனால் இயக்குனர் இந்த காட்சியை கண்டிப்பாக ரசிப்பார்கள் என்று கட்டாயப்படுத்தி திரைப்படத்திற்காக வைக்க சொல்லி இருக்கிறார். ஆனால் இப்பொழுதும் இந்த பாடலை பார்த்தால் சரத்குமாரின் மகனே அசிங்கமாக பார்ப்பதால், டிவியில் அர்ஜுனா அர்ஜுனா பாடல் ஒளிபரப்பாகும் போது சேனலை மாற்றி விடுவாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X