என் கதை.. ரஜினிகாந்த் நெகிழ்ச்சிப் பேச்சு
டெல்லி: வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழும் என்பதற்கு என் கதைதான் உதாரணம் என்று கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனத்தின் 25வது வெள்ளி விழா ஆண்டையொட்டி நடத்தப்பட்ட ஆன்லைன் கருத்துக் கணிப்பில் இந்தியாவின் கிரேட்டஸ்ட் இந்தியராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த்தைப் போல மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் முதலிடம் ரஜினிக்குத்தான். விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடந்தது. அதில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு விருதினை வழங்கினார்.

அதியப் பிறவி
இந்த விழாவில் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், வாழ்க்கையில் சில நேரங்களில் அதிசயம் நிகழும். அப்படி நிகழ்கிறது என்பதற்கு எனது வாழ்க்கைதான் உதாரணம்.

ரைட் ரைட்....
ஒரு சாதாரண பஸ் கண்டக்டர் இங்கு மாபெரும் மனிதர்களோடு சமமாக நின்று விருது வாங்குகிறார். இது உண்மையிலேயே அதிசயம்.

குரு - சிஷ்யன்
இந்த விருதை எனக்கு தாயாகவும், தந்தையாகவும் திகழும் என் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட்டுக்கும், என் குருநாதர் கே.பாலசந்தருக்கும், என் தமிழ் மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

அன்புக்கு நான் அடிமை
இவர்களின் அன்பும், பாசமும் இல்லை என்றால், நான் இங்கு இருந்திருக்க மாட்டேன் என்றார் ரஜினிகாந்த்.


Click it and Unblock the Notifications