ஜோசப் விஜய்ன்னு பஞ்சாயத்தை கிளப்பிய போஸ் வெங்கட்.. டிரெண்டிங்கை தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள்!
சென்னை: திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் வரும் தேர்தலில் மோதல் என விஜய் பேசியதை நிஜமாக்கும் அளவுக்கு திமுகவின் அபிமானியான நடிகர் போஸ் வெங்கட் சமீபத்தில் விஜய்யை தாக்கி பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே விஜய்க்கு பதிலாக சூர்யா அரசியலுக்கு வரவேண்டும் எனக் கூறியிருந்தார் போஸ் வெங்கட்.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் விஜய்க்கு எதிராக ட்வீட்களை பதிவிடுவதும் திமுக மேடைகளில் விஜய்க்கு எதிராக பேசியும் வரும் போஸ் வெங்கட் திமுக மன்னராட்சி தான் ஜோசப் விஜய் அவர்களே என பேசியது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே எச். ராஜா ஜோசப் விஜய் என்கிற பஞ்சாயத்தை கிளப்ப அதன் பின்னர், நடிகர் விஜய்யும் ஜோசப் விஜய் என்றே தன்னை குறிப்பிட்டு தக் லைஃப் பதில் கொடுத்து வரும் நிலையில், போஸ் வெங்கட்டின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக #MyVoteFor_JosephVijay என்கிற ஹாஷ்டேக்கை தளபதி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
அஜித் vs விஜய்: குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி சோலோ ரிலீஸாக வெளியாகவுள்ள நிலையில், இன்று அந்த படத்தின் டிரெய்லர் வரும் என எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் #GoodBadUglyFromApril10 என்கிற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். நாளை முதல் தமிழ்நாட்டிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே ஓவர்சீஸில் டிக்கெட் புக்கிங் ஆரம்பமாகி வசூல் வேட்டையை ஆரம்பித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. குட் பேட் அக்லி ஹாஷ்டேக் ஒரு பக்கம் டிரெண்டாக இன்னொரு பக்கம் விஜய்யின் #MyVoteFor_JosephVijay ஹாஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.
போஸ் வெங்கட் பேச்சு: தமிழ்நாட்டில் நடப்பது மன்னராட்சி தான், மன்னராட்சி தான் என்பதை அடித்துச் சொல்கிறேன் ஜோசப் விஜய் அவர்களே என மத அரசியலை கையில் எடுத்து போஸ் வெங்கட் பேசியிருப்பதற்கு எதிராக ஏகப்பட்ட தவெக தொண்டர்கள் கருத்துக்களை பதிவிட்டு போஸ் வெங்கட்டை கண்டித்து வருகின்றனர்.
எம்மதமும் சம்மதம்: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்துள்ள நிலையில், என்றுமே மதவாத அரசியலை அவர் செய்யமாட்டார் என்றும் எம்மதமும் சம்மதம் என்கிற கொள்கையை கொண்டிருப்பார் என்று ரசிகர்கள் கூறி மற்ற மதத்தினருடன் விஜய் நெருக்கமாக பழகும் புகைப்படங்களை ஷேர் செய்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
விஜய்க்கு பெருகும் ஆதரவு: சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன் என சொல்லிக் கொண்டிருக்கும் தவெக தலைவர் விஜய்க்கு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. முதல்வர் பதவிக்கான போட்டியில் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து 2ம் இடத்தில் விஜய் இருப்பதாக சில மீடியா சேனல்களில் கருத்துக்கணிப்புகளும் வரத் தொடங்கியுள்ளன. நான் இந்து தான் என்னோட ஓட்டு விஜய்க்குத்தான் என போஸ் வெங்கட்டுக்கு பதிலடி கொடுக்க ஏகப்பட்ட ரசிகர்கள் விஜய்க்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் சர்க்கார் அமையுமா?: அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் ஜன நாயகன் படமே மக்களுக்கான படமாகத்தான் உருவாகி வருவதாக கூறுகின்றனர். திமுக எனும் பெரிய கட்சியை எதிர்த்து முதல் முறை தேர்தலை சந்திக்கப்போகும் தவெக வெல்வதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்று எள்ளி நகையாடி வருகின்றனர். திமுகவை தாண்டி எம்ஜிஆர் இல்லாத போதும் அதிமுகவுக்கு ஜெயலலிதாவுக்காக ஓட்டுப் போட்டு அவரை மக்கள் முதல்வராக மாற்றினர். திமுகவை விஜய் எதிர்த்து வரும் நிலையில், மக்கள் செல்வாக்கு அவருக்கு கிடைக்குமா என்பது அடுத்த ஆண்டு தேர்தல் ரிசல்ட்டில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











