அதனால்தான் திருமணம் செய்து கொண்டேன்… பட்டென்று பதில் சொன்ன மகேஷ் பாபு

ஹைதராபாத் : நடிகர் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் Sarkaru Vaari Paata.

கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை மகேஷ் பாபுவுடன் இணைந்து மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

Sarkaru Vaari Paata திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் பிரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் மகேஷ்பாபு இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதில் தந்துள்ளார்.

Sarkaru Vaari Paata

Sarkaru Vaari Paata

நடிகர் மகேஷ்பாபு கடைசியாக நடித்த படம் சரிலெரு நீகேவ்வாரு. 2020ஆம் ஆண்டு ரிலீஸான இந்த படம் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து Sarkaru Vaari Paata படத்தில் கமிட்டானார் மகேஷ்பாபு. கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் இந்த படத்தை இயக்கியுள்ளார். மகேஷ்பாபுவின் முந்தைய படத்தின் வெற்றி இயக்குனரின் முந்தைய படத்தின் வெற்றி இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இப்படம் அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசாக உள்ளது.

உச்சத்தில் இருக்கும் எதிர்பார்ப்பு

உச்சத்தில் இருக்கும் எதிர்பார்ப்பு

Sarkaru Vaari Paata படத்தின் பஸ்ட் லுக் வெளியான நாளிலிருந்தே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கூடிக் கொண்டு வருகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ட்ரெய்லரும் அதே போல மிகப் பெரிய ரீச் ஆகியுள்ளது. இந்த படம் கடந்த ஆண்டிலேயே முடிக்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில் Corona காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டது படக்குழு. இந்த படத்தை மகேஷ் பாபுவுடன் இணைந்து மைத்திரி மூவி மேக்கர்ஸ் மற்றும் 18 Reels Plus entertainment தயாரித்துள்ளனர்.

Insta கேள்விகள் Immediate பதில்கள்

Insta கேள்விகள் Immediate பதில்கள்

Sarkaru Vaari Paata திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக பதில் அளித்துள்ளார் நடிகர் மகேஷ்பாபு. எந்த ஒரு கேள்விக்கும் யோசிக்காமல் படார் படார் என பதில் தந்துள்ளார் மகேஷ் பாபு. Sarkaru Vaari Paata படத்தில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வு என்ன என்ற கேள்விக்கு " இந்த படத்தில் ஹீரோவின் கதாபாத்திரம், அதை உருவாக்கிய விதம் தான் மறக்க முடியாத நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார். Money Heist சீரியஸில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் யார் என்ற கேள்விக்கு " Professor " என பதில் தந்துள்ளார்.

அதனால் தான் திருமணம் செய்து கொண்டேன்

அதனால் தான் திருமணம் செய்து கொண்டேன்

ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த மகேஷ்பாபு அவர் குடும்பத்தைப் பற்றிய சில கேள்விகளுக்கும் பதில் தந்துள்ளார். Sarkaru Vaari Paata படத்தின் " Penny " பாடலில் ஆடிய அவரது மகளை குறிப்பிட்டு எப்போது அவர் சினிமாவில் நடிக்க வருவார் என கேட்க அதற்கு சற்றும் யோசிக்காமல் " அவர் ஏற்கனவே நடிகை தான்" என பதில் தந்தார். அதைத்தொடர்ந்து உங்கள் மனைவியிடம் உங்களுக்கு பிடித்த குணம் எது என்ற கேள்விக்கு, " அவரின் அனைத்து குணங்களும் பிடிக்கும். அதனால்தான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என சொல்லியபடியே புன் சிரிப்பை உதிர்த்தார் மகேஷ் பாபு. உங்கள் நெருங்கிய நண்பர் யார் என்ற கேள்விக்கும் " அதுவும் எனது மனைவியே என பதில் அளித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X