படத்துல ரெண்டு ஹீரோயின்ஸ் வாழ்ந்து இருக்கீங்க.. மனைவி கேலி செய்ததற்கு விஜய் சேதுபதி அளித்த பதில்!

சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்

முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது

இந்த நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் வாழ்ந்து இருக்கீங்க என மனைவி கேலி செய்வதாக தனியார் யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார்

காத்துவாக்குல ரெண்டு காதல்

காத்துவாக்குல ரெண்டு காதல்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த திரைப்படம் நானும் ரவுடி தான் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த கூட்டணி இப்பொழுது இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். காதலை எப்பொழுதும் அழகாகவும் வித்தியாசமாகவும் அனைவரும் ரசிக்கும் வகையில் குறிப்பாக இந்த தலைமுறை இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் தனது ஒவ்வொரு படங்களிலும் கவித்துவமாக காட்டிவரும் விக்னேஷ் சிவன் இந்த முறையை காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இரண்டு காதலை மையமாக வைத்து எடுத்துள்ளார்.

இரண்டு பெண்களை காதலிக்கும்

இரண்டு பெண்களை காதலிக்கும்

ஹீரோவாக இருக்கும் போதே குணசித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரத்திலும் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் விஜய் சேதுபதி காதல் படங்களிலும் தன்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலிக்கும் இளைஞனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்

பாசிட்டிவ்வான விமர்சனங்களை

பாசிட்டிவ்வான விமர்சனங்களை

ஏப்ரல் 28ம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. விக்னேஷ் சிவனின் வழக்கமான படங்களைப் போலவே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் வித்தியாசமாகவும் அனைவரும் ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முறை விஜய் சேதுபதியுடன் இணைந்து சமந்தாவும் நடித்திருப்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது

வாழ்ந்திருக்கீங்கன்னு மனைவி கேலி

வாழ்ந்திருக்கீங்கன்னு மனைவி கேலி

சமந்தா மற்றும் நயன்தாரா என ஒரே படத்தில் இரண்டு கதாநாயகிகள் உடன் விஜய் சேதுபதி நடித்துள்ள அதை பார்த்த அவரது மனைவி நீங்க வாழ்ந்து இருக்கீங்க என கேலி செய்தாராம். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி உங்களுக்கு படத்துல பார்க்கும்போது வாழ்ந்த மாதிரிதான் தெரியும் ஷூட்டிங்கில் வந்து பார்த்தால்தான் புரியும்

வாழ்ந்தேனா இல்ல வறுத்தெடுத்தாங்களான்னு என்று விஜய்சேதுபதி அளித்துள்ளார். சமீபத்தில் விஜய் சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X