பிரதீப் ரங்கநாதனை பிடித்துப்போட்ட புஷ்பா பட தயாரிப்பாளர்.. மீண்டும் மலையாள நடிகை தான் ஜோடியாம்!

சென்னை: லவ் டுடே, டிராகன் என பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக அடுத்தடுத்து 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் படங்களை கொடுத்து வரும் நிலையில், அவர் ஹீரோவாக நடிக்கவுள்ள நான்காவது படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. "சார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க" மற்றும் "ஜாவா சுந்தரேசன்" போன்ற வசனங்கள் தான் பிரதீப் ரங்கநாதனின் வளர்ச்சியை பார்த்து தோன்றுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை இயக்கி வெற்றி கொடுத்த பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் மூலம் தன்னையே இயக்கி ஹீரோவாக மாற்றிக் கொண்டார். அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான டிராகன் திரைப்படம் அஜித்தின் விடாமுயற்சி படத்தை வசூல் ரீதியாக வென்ற நிலையில், குட் பாய் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரதீப் ரங்கநாதனின் நான்காவது படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

Mythri Movie Makers produced Pradeep Ranganathan next movie

அந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. சுதா கொங்கராவின் உதவி இயக்குநரான கீர்த்திஸ்வரன் தான் இந்த படத்தை இயக்குகிறார்.

கோலிவுட்டின் அடுத்த ஸ்டார்: தளபதி விஜய் சினிமாவை விட்டு விலகி விட்டால் தமிழ் சினிமா அப்படியே நின்றுவிடும் என்பது கிடையாது. ஒவ்வொரு முறையும் புதிய நடிகர்கள் வந்து கொண்டு தான் இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக கோலிவுட் அடுத்த ஸ்டார்களாக சிவகார்த்திகேயன் மற்றும் அவருக்கு போட்டியாக தற்போது பிரதீப் ரங்கநாதன் என அடுத்த லிஸ்ட் உருவாக்கி வருகிறது.

டிராகன் வெற்றி: லவ் டுடே படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வந்த எல்ஐகே திரைப்படம் ரிலீசுக்கு தயாராகாத நிலையில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார் பிரதீப் ரங்கநாதன். அடுத்ததாக அவரது புதிய படத்தின் அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில்: சுதா கொங்கரா சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி படத்தை இயக்கி வரும் நிலையில், அவரது உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ள புதிய படம் உருவாக உள்ளது. அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது. இந்த படத்தில் சரத்குமார், பரிதாபங்கள் டிராவிட் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

மமிதா பைஜு: விஜய்யின் ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் பிரேமலு நடிகை மமிதா பைஜு தான் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்கப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே மமிதா பைஜு சூர்யா, தனுஷ், ஷங்கரின் மகன் அர்ஜித், விஷ்ணு விஷால் என பல நடிகர்களுடன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக மாறியுள்ளார்.

மலையாள நடிகை: லவ் டுடே படத்திலேயே பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மலையாள நடிகை இவானா நடித்திருந்தார். அதன் பின்னர் வெளியான டிராகன் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் மலையாள நடிகை தான். கயாடு லோஹர் அசாமை சேர்ந்தவராக இருந்தாலும் அவரும் மலையாளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் நடித்து பிரபலமானவர் தான். இந்நிலையில், மீண்டும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மலையாள நடிகை கமிட் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X