அப்பாஸ் போல ஆளே அப்ஸ்காண்டான “மக்காயேலா” நடிகர்.. இப்போ அமெரிக்காவுல இவ்ளோ பெரிய பதவியில இருக்காரா?

சென்னை: நடிகர் சித்தார்த் வேணுகோபால் தற்போது எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் என்பது குறித்து பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். "ஆனந்த தாண்டவம்" திரைப்படத்தில் ரகு என்ற கதாநாயகனாக நடித்திருந்த இவர், சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார். தற்போது அவரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

2009-ல் வெளியான "ஆனந்த தாண்டவம்" திரைப்படம் மூலம் சித்தார்த் வேணுகோபால் திரையுலகிற்கு அறிமுகமானார். அப்படத்தில் தமன்னா மற்றும் ருக்மிணி ஆகியோருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்தக் காலத்தில் சாக்லேட் பாய் போல தோற்றமளித்த சித்தார்த், தனது அழகான கண்கள் மற்றும் வசீகரமான தோற்றத்தால் பல இளம்பெண்களின் கனவுகளை கெடுத்தார்.

Naan Movie Actor Sidhdharth Venugopal who abscond in cinema now a Director at Intuit in the USA
Photo Credit:

ஆனந்த தாண்டவம், நான்: 2012-ல் வெளியான "நான்" திரைப்படத்தில் விஜய் ஆண்டனி முதன்முதலில் கதாநாயகனாக நடித்திருந்தார். அப்படத்தில் சித்தார்த் அசோக் என்ற பாத்திரத்தில் "பிளே பாய்" கதாபாத்திரத்தில் நடித்தார். "மக்காயேலா மக்காயேலா" பாடலில் எல்லாம் அவ்வளவு வசீகரமாக இருந்தும், "நான்" படத்திற்குப் பிறகு அவர் திரையுலகில் காணாமல் போனது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அப்பாஸ் போல: சினிமாவில் பல பிரபலங்கள் ஒன் டைம் வொண்டர்களாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சில நடிகைகள் வாம்மா மின்னல் என வந்த வேகம் தெரியாமல் சினிமாவை விட்டே காணாமல் போய் விடுவார்கள். நடிகர்களிலும் பலரது நிலைமை அப்படித்தான் உள்ளது. நடிகர் அப்பாஸ் ஐஸ்வர்யா ராய் வரை ஜோடியாக்கி நடித்த நிலையில், சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்தும் திடீரென காணாமல் போய் விட்டார். வெளிநாட்டில் வாழ்ந்து வந்த அவர் தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவுக்கு குட்பை: அதுபோல, சினிமாவை விட்டு விலகிய பிறகு சித்தார்த் வேணுகோபால் என்ன ஆனார் என்று பலரும் தேடி வந்த நிலையில், அவரது சமூக வலைத்தளப் பக்கம் ஒன்று வைரலாகத் தொடங்கியது. அதில் அவர் தனது பழைய மற்றும் புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். முன்பு ஒல்லியாக இருந்த அவர், தற்போது உடற்பயிற்சி செய்து தனது தோற்றத்தை முழுவதுமாக கட்டுமஸ்த்தாக மாற்றியுள்ளார். எனினும், அந்தப் பக்கம் அவரது உண்மையான பக்கமா அல்லது போலியானதா என்பது உறுதி செய்யப்படவில்லை.

Naan Movie Actor Sidhdharth Venugopal who abscond in cinema now a Director at Intuit in the USA
Photo Credit:

சித்தார்த் வேணுகோபால் என்ன செய்கிறார்?: "நான்" படத்திற்குப் பிறகு, சித்தார்த் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததாகவும், அங்கு MBA படித்து முடித்து தற்போது 'Intuit' என்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தகவல்கள் குறித்து சித்தார்த் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

சினிமா ஒரு பெரிய கனவாக இருந்ததாக சித்தார்த் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தாலும், அவர் ஏன் சினிமாவை விட்டு விலகினார் என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை. நல்ல கதை அமைந்தால் அவர் மீண்டும் திரையுலகிற்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயித்தாலும் தோத்தாலும்: திரையுலகம் அனைவருக்கும் நிரந்தரமான வாய்ப்புகளை வழங்குவதில்லை. சில நடிகர்கள் எவ்வளவு தோல்விகளைக் கண்டாலும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடுவார்கள். ஆனால், அவர்களால் எதிர்காலத்திற்கான சேமிப்பை உருவாக்க முடிவதில்லை. சிலர் சினிமாவுக்கு வந்து, பின்னர் வேறு தொழில்களைத் தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக செயல்படுகிறார்கள். நடிகர் சித்தார்த் இந்த இரண்டாவது பிரிவில் உள்ள ஒருவராக தற்போது பார்க்கப்படுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X