தனுஷின் ‘நானே வருவேன்’ புது அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள் !

சென்னை : தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படம் குறித்த வெறித்தனமான அப்டேட் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தனுஷ் தற்போது, மாறன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.

தனுஷ்

தனுஷ்

தனுஷ் திரையுலகில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். அவர், மாறன், திருசிற்றம்பலம் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் துவங்கி, முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

இருவரும் பிஸி

இருவரும் பிஸி

தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் தங்களின் மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதமாகி வந்த நிலையில், இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், டிசம்பர் இறுதி வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை வேடத்தில்

இரட்டை வேடத்தில்

இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பார் என்றும், பிகில் மற்றும் மகாமுனி படப்புகழ் நடிகை இந்துஜா ரவிச்சந்தர் முக்கிய ரோலில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. நானே வருவேன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பை ஜனவரியில் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

மீண்டும் இணைந்துள்ளனர்

மீண்டும் இணைந்துள்ளனர்

கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன போன்ற படங்களுக்குப் பிறகு செல்வராகவன் தனுஷ் மீண்டும் நானே வருவேன் படத்தில் இணைந்துள்ளனர்.

ஓடிடியில்

ஓடிடியில்

ராஞ்சனா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ் தற்போது ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அட்ராங்கி ரே படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம், நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X