twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சங்க கட்டிடம் கட்டிவிட்டு கல்யாணம் சரி, தேர்தலுக்கும் அதையே காரணம் காட்டும் விஷால்

    By Siva
    |

    சென்னை: நடிகர் சங்கத்திற்கு இப்போதைக்கு தேர்தல் இல்லையாம்.

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று மதியம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. தலைவர் நாசர் தலைமையில் கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பொதுச் செயலாளர் விஷால் வரவேற்றார்.

    Nadigar Sangam general body meet held in Chennai

    நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் எஸ்.வி. சேகர் கூறியதாவது, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடிகர் சங்க தேர்தல் நடத்த வேண்டும். 80களில் இருந்து நடிகர் சங்க உறுப்பினரான என்னை நீக்கியது செல்லாது. என் உரிமைக்காக இங்கு வந்திருக்கிறேன். கட்டிடம் கட்டிவிட்டு தான் தேர்தல் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றார்.

    நடிகர் சங்க கட்டிடம் கட்ட இன்னும் ரூ. 20 கோடி தேவைப்படுகிறது. அந்த நிதியை திரட்ட இரண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். எனவே ஆறு மாதம் கழித்து நடிகர் சங்க தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.

    6 மாதத்தில் ரூ. 20 கோடி திரட்டுவது சாத்தியம் அல்ல என்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ். நடிகர் சங்க தேர்தலை ஒத்திப் போடுவதில் உடன்பாடு இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    வரும் அக்டோபர் மாதத்துடன் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிகிற நிலையில் தேர்தலை 6 மாதத்திற்கு ஒத்தி வைக்க பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Nadigar Sangam general body meet was held in Chennai today. General body has agreed to postpone Nadigar Sangam election citing building construction issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X