எல்லாம் முடிஞ்சி போச்சு… தனியாக புது வீட்டில் குடியேறும் நாக சைதன்யா !
ஹைதராபாத் : நடிகர் நாக சைதன்யா ஹைதராபாத்தில் புதிதாக ஒரு வீடு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த வீட்டில் தற்போது சில வேலைகள் நடைபெற்று வருவதால் அந்த பணிகள் முடிந்ததும் அவர் அங்கு குடியேற உள்ளார்.
நாக சைதன்யா - சமந்தா இருவரும் வாழ்ந்து வந்த 'கச்சி பவுலி' வீட்டில் இனி சமந்தா மட்டுமே வசிக்க உள்ளார்.

காதல் திருமணம்
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஹைதராபாதில் வசித்து வந்தார்.

பெயரை மாற்றினார்
சமந்தா ரூத் பிரபு என்ற தனது பெயரை மாற்றி, நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து சமந்தா அக்கினேனி என்று மாற்றினார். இதையடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 'S' என்று மாற்றினார். இதையடுத்தே இவர்களின் விவாகரத்து விவகாரம் இணையத்தில் மெல்ல கசியத் தொடங்கியது.

இருவரும் பிரிந்தனர்
கடந்த அக்டோபர் 2ந் தேதி நாக சைதன்யா - சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்கள் இருவருக்கிடையே பேசிய சமரசம் அனைத்துமே தோல்வியில் முடிந்துள்ளது. இவர்களின் விவாகரத்து குறித்து பல வதந்திகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

புதிய வீடு
இந்நிலையில், நாக சைதன்யா ஒரு புதிய அபார்ட்மெண்ட் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹைதராபாத்தில் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் புதிய வீட்டை வாங்கியுள்ளார். தற்போது அந்த வீட்டில் ஒரு சில பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்தவுடன் நாக சைதன்யா மட்டும் அங்கு சென்றுவிடுவார் என்று கூறப்படுகிறது.

சமந்தாவின் பெயரில்
நாக சைதன்யா - சமந்தா இருவரும் வாழ்ந்து வந்த ஹைதராபாத் கச்சி பவுலி மாளிகை வீடு சமந்தாவின் பெயரில் இருப்பதாகவும். அந்த வீட்டில் தான் சமந்தா தொடர்ந்து இருக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் நாக சைத்தான்யா வேறு வீட்டை வாங்கி குடியேற இருப்பதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











