2வது திருமணம் செய்த சமந்தா.. திடீரென நாக சைதன்யா போட்ட இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்தீங்களா?

ஹைதராபாத்: நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யா சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட போஸ்ட்டை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். சமந்தாவுக்கு 2வது திருமணம் ஆன நிலையில், எதை போஸ்ட் செய்வது என யோசித்து இப்படியொரு போஸ்ட்டை போட்டீங்களா நாக சைதன்யா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தி ஃபேமிலி மேன் சீசன் 2 வெப்சீரிஸ் வெளியான போது, சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் பிரிய முடிவு செய்ததாக பேச்சுக்கள் அடிபட்டன. சமந்தாவுக்கும் நாக சைதன்யா குடும்பத்திலும் கடும் எதிர்ப்புகள் அந்த வெப்சீரிஸில் அவர் நடித்த நிலையில் தான் கிளம்பியது என்கின்றனர்.

Naga Chaitanya post a new instagram post after Samantha get married with Raj Check his post
Photo Credit:

அதன் தொடர்ச்சியாகவே சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார் என்றும் ராஜ் நிடிமோரு தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தார் என்றும் கூறப்படுகிறது.

முதல் படத்தில் நடித்த நடிகருடன் திருமணம்: கெளதம் மேனன் இயக்கத்தில் தமிழில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனான "ஏ மாய சேசாவே" படத்தில் தான் சமந்தா ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தில் அவருடன் ஜோடியாக நடித்த நாக சைதன்யாவுடன் காதல் ஏற்பட்ட நிலையில், இருவரும் பிரமாண்டமாக தங்களது திருமணத்தை இந்து முறைப்படியும் கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் செய்துக் கொண்டனர். நாக சைதன்யாவை சமந்தா திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாக நடிகர் சித்தார்த் உடனும் காதல் கிசுகிசுக்கள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

ஜீவனாம்சமும் வேண்டாம்: திருமணமாகி சுமார் 4 ஆண்டுகளில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர விரும்பினர். சமந்தா தான் முதல் நபராக அக்கினேனி என்கிற நாக சைதன்யா குடும்ப பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்க விவாகரத்து வதந்திகள் கிளம்பின. சில நாட்களில் விவாகரத்து அறிவிப்பையும் வெளியிட்டனர். நடிகை சமந்தா சினிமாவில் சம்பாதித்து கோடிக்கணக்கில் சொத்துக்களை வைத்துள்ள நிலையில், நாக சைதன்யாவிடம் இருந்து ஒரு ரூபாய் கூட ஜீவனாம்சமாக வாங்கவில்லை. நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலவுக்கும் இடையே உள்ள காதல் தான் இவர்கள் பிரிய காரணம் என சமந்தா மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் கிளம்பின.

சமந்தா ரசிகர்கள் சாபம்: நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவை ரகசியமாக டேட் செய்ய ஆரம்பித்த தகவல்கள் மற்றும் போட்டோக்கள் கசிந்த நிலையில், நாக சைதன்யாவை சமந்தா ரசிகர்கள் சபிக்கவே செய்தனர். நோய்வாய்ப்பட்டு சமந்தா மருத்துவமனையில் படுத்த படுக்கையாக கிடக்க காரணமே நாக சைதன்யா அவரை விட்டு பிரிந்தது தான் என்றனர். ஆனால், தற்போது சமந்தா தி ஃபேமிலி மேன் இயக்குநரை திருமணம் செய்த நிலையில், நாக சைதன்யா ரசிகர்கள் சமந்தாவை திட்ட ஆரம்பித்துள்ளனர்.

நாக சைதன்யா இன்ஸ்டா போஸ்ட்: இந்நிலையில், நடிகர் நாக சைதன்யா தான் நடித்து வெளியான Dhootha வெப்சீரிஸ் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகிறது என அதில், நடித்த போட்டோவுடன் போஸ்ட் ஒன்றை சற்றுமுன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அதன் ஓராண்டு நிறைவை நீங்கள் இப்படி போஸ்ட் போட்டு கொண்டாடியது போல தெரியவில்லையே என்றும் சமந்தா திருமணத்துக்கு ஏதாவது போஸ்ட் போட வேண்டும் போடாதீங்க பாஸ் என கலாய்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு நாக சைதன்யா பேஸ்புக் பக்கத்தில் Dootha ஒரு வருட நிறைவு முன்னிட்டு போஸ்ட் போட்டிருந்தார் என்றும் அவரது ரசிகர்கள் சீக்கிரமே அந்த வெப்சீரிஸின் அடுத்த பாகம் உருவாக வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X