எனக்கென அப்படி யாருமே இல்லை.. நாக சைதன்யா என்ன இப்படி சொல்லிட்டாரு?

ஹைதராபாத்: சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு அவரை பிரிந்த நாக சைதன்யா இப்போது நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்திருக்கிறார். இருவரது திருமணமும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், குடும்பத்தினர் கலந்துகொண்டு தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள். இந்தச் சூழலில் நாக சைதன்யா தெரிவித்திருக்கும் விஷயம் ஒன்று ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா கடைசியாக தூதா என்ற வெப் சிரீஸில் நடித்தார். அதற்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்போடு படம் வெளியானாலும் அந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. இப்போது அவர் தண்டெல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஹீரோயினாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் தனக்கு ஹிட்டாக அமையும் என்ற நம்பிக்கை சைதன்யாவுக்கு இருக்கிறது.

naga chaitanya samantha nagarjuna

சமந்தாவுடன் பிரிவு: இதற்கிடையே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது தனக்கு ஜோடியாக நடித்த சமந்தாவை காதலித்தார் சைதன்யா. இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து அவர்களது திருமணம் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். சில வருடங்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்த அவர்கள் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டு விவாகரத்தும் பெற்றுக்கொண்டார்கள்.

சோபிதாவுடன் காதல்: சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா சில வருடங்களுக்கு முன்பிலிருந்து சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்துவந்தார். அவர்கள் வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகின. ஆனால் இரண்டு பேருமே தங்களது காதலை பொதுப்படையாக அறிவிக்கவில்லை. சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு நாக சைதன்யாவுக்கும், சோபிதாவுக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இரண்டாவது திருமணம்: அதனையடுத்து ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் கடந்த வருடம் அவர்களுக்கு திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. தனது நாகேஸ்வர ராவின் சிலைக்கு முன்பு சோபிதாவுக்கு தாலி கட்டினார் அவர். இந்தத் திருமண வாழ்க்கையிலாவது நாக சைதன்யா நிலைத்திருக்க வேண்டும் என்று சமந்தாவின் ரசிகர்களும், அவரது ரசிகர்களும் கமெண்ட்ஸ் செய்து வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

சைதன்யா பேட்டி: இந்நிலையில் நாக சைதன்யா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருகிறது. அவர் கொடுத்த பேட்டி ஒன்றில், "நான் சினிமா குடும்பத்திலிருந்து வந்தவன். ஆனால் எனக்கு சினிமாவில் நண்பர்கள் என்று யாரும் இல்லை. ராணா டகுபதி என்னை சிறு வயதிலிருந்தே பார்த்துவருகிறார். அவர் எனக்கு உறவினர். அதனால் அவர் நண்பர்கள் லிஸ்ட்டில் வரமாட்டார்" என்றார்.இதனைப் பார்த்த ரசிகர்களோ என்னது சைதன்யாவுக்கு நண்பர்களே இல்லையா என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X