சமமாக நினைக்கிறோம்.. முழுமையாக அனுபவிக்கிறேன்.. திருமணம் பற்றி நாக சைதன்யா ஓபன் டாக்

ஹைதராபாத்: நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு பிறகு பிரிந்த நாக சைதன்யா இப்போது சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். அவர்களது திருமணம் கடந்த வருடம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தச் சூழலில் தண்டேல் படத்தின் ப்ரமோஷனில் நாக சைதன்யா பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இணைந்து நடித்தபோது சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கோவாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது அவர்களின் திருமணம். தொடர்ந்து சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையில் ஆரம்பத்தில் சிறு விரிசல் ஏற்பட்டு பிறகு பிரிந்துவிட்டார்கள். அதற்கு சமந்த திருமணத்துக்கு பிறகும் நடித்ததுதான் காரணம் என்று பலர் யூகங்களாக சொன்னார்கள். ஆனால் உண்மை என்னவென்று அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

naga chaitanya sobitha dhulipala

சோபிதாவுடன் காதல்: சமந்தாவை பிரிந்த பிறகு; நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலித்தார். இருவரும் அடிக்கடி வெளிநாட்டுக்கு டேட்டிங் சென்றார்கள். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். ஆனால் இருவரும் தங்களது காதலை வெளியில் சொல்லாமல் மௌனத்தையே பதிலாக கொடுத்துவந்தனர். இருந்தாலும் அவர்கள் காதலிப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்துவிட்டது. சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

பிரம்மாண்ட திருமணம்: அதனையடுத்து ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் கடந்த வருடம் அவர்களுக்கு திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. தனது நாகேஸ்வர ராவின் சிலைக்கு முன்பு சோபிதாவுக்கு தாலி கட்டினார் அவர். இந்தத் திருமண வாழ்க்கையிலாவது நாக சைதன்யா நிலைத்திருக்க வேண்டும் என்று சமந்தாவின் ரசிகர்களும், அவரது ரசிகர்களும் கமெண்ட்ஸ் செய்து வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

தண்டேல்: இதற்கிடையே நாக சைதன்யா இப்போது தண்டேல் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படமானது பிப்ரவரி ஏழாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். திருமணம் ஆன பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் தண்டேல் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார் சைதன்யா. படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்துகொள்கிறார். இந்தச் சூழலில் சோபிதா துலிபாலா குறித்து அவர் பேசியிருக்கிறார்.

என்ன பேசியிருக்கிறார்?: ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், "என்னுடைய திருமண வாழ்க்கை நன்றாக இருக்கிறது. நான் அதை முழுமையாக அனுபவித்துவருகிறேன். திருமணமாகி இரண்டு மாதங்கள்தானே ஆகின்றன. சினிமாவையும், வாழ்க்கையையும் நாங்கள் சமமாக கொண்டு செல்கிறோம். நானு சோபிதாவும் ஒரே சிட்டியை சேர்ந்தவர்கள் இல்லைதான். ஆனால் கலாசார ரீதியாக நிறைய ஒற்றுமைகள் எங்களுக்குள்ளே இருந்தன" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X