Naga Chaitanya Net worth: 37வது பிறந்தநாளை கொண்டாடும் நாக சைதன்யா.. சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
சென்னை: நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவருமான நடிகர் நாக சைதன்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
ரட்சகன், தோழா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நாகார்ஜுனாவுக்கும் அவரது முதல் மனைவி லக்ஷ்மி டகுபதிக்கும் மகனாக 1986ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தவர் நாக சைதன்யா.
இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நாக சைதன்யா ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்றும் அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு குறித்த தகவல்களையும் இங்கே காணலாம் வாங்க..

37வது பிறந்தநாள்: நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யா இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 2009ல் தெலுங்கில் வெளியான ஜோஷ் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்த ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்திருந்தார். தமிழில் சிம்பு, த்ரிஷா ஹீரோ, ஹீரோயினாக நடித்த நிலையில், சிம்பு இயக்கும் படத்தின் நடிகர்களாக நாக சைதன்யா - சமந்தா நடித்திருப்பார்கள். தெலுங்கில் ஏ மாய சேசாவே என்கிற தலைப்பில் வெளியான படத்தில் நாக சைதன்யா - சமந்தா ஹீரோ, ஹீரோயினாக நடித்திருப்பார்கள். அந்த படத்திலேயே ஏற்பட்ட காதல் தான் பின்னர் இருவரும் 2017ம் ஆண்டு திருமணம் ஆக வழிவகை செய்தது.
சமந்தாவுடன் விவாகரத்து: 4 ஆண்டுகள் சந்தோஷமாக நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த சமந்தாவும் நாக சைதன்யாவும் தங்கள் காதலை வெளிப்படுத்தும் விதமாக டாட்டூக்களை போட்டுக் கொள்வது, சமந்தா பிறந்தநாளுக்கு நாக சைதன்யாவே கேக் சமைப்பது என அலப்பறையை கிளப்பினர். ஆனால், திடீரென இருவரும் 2021ம் ஆண்டு விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்து பிரிந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினர்.
சம்பளம்: தெலுங்கு திரையுலகின் இளம் நடிகரான நாக சைதன்யா ஒரு படத்துக்கு அதிகபட்சம் 10 முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமீர் கானின் லால் சிங் சத்தா படத்தின் மூலம் இந்திக்கு சென்ற நாக சைதன்யா வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான கஸ்டடி படத்தின் மூலம் கோலிவுட்டிலும் நடித்திருந்தார். ஆனால், இரு படங்களும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. விளம்பரங்களில் நடிக்க 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
சொத்து மதிப்பு: நடிகர் நாக சைதன்யாவுக்கென தனியாக ஹைதராபாத் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் தந்தை நாகார்ஜுனா வீடுக்கு அருகே சொந்த வீடு உள்ளது. மேலும், சொகுசு கார்களையும் வைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக 154 கோடி ரூபாய் வரை நாக சைதன்யாவிடம் சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











