Don't Miss!
- Finance
பில் கேட்ஸ் கிரிப்டோ-வில் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லையாம்.. ஏன் தெரியுமா..?
- News
வெறும் 2 நிமிடம்.. அரசு பணி கனவு கலைந்ததே! கதறிய பெண்.. கடுப்பான கணவர்.. குரூப் 2 தேர்வில் பரபரப்பு
- Sports
ஆர்சிபியை கைவிட்ட ரோகித் சர்மா... டெல்லிக்கு எதிராக பெரும் ரிஸ்க்.. மும்பை அணியில் நிலவும் குழப்பம்!
- Automobiles
எந்த நாட்டிலிருந்தும் காரை இறக்குமதி செய்ய மாட்டோம்... பாக் தடாலடி முடிவு இந்தியாவிற்கு புதிய தலைவலி
- Technology
ரெடியா., இந்தியாவில் ஹைப்பர்லூப்- விமான வேகம் பயணம்: சென்னை ஐஐடி உடன் கூட்டு சேர்ந்த இந்தியன் ரயில்வே!
- Lifestyle
எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் தேங்காய் ஏன் உடைக்கிறார்கள் தெரியுமா? ஷாக் ஆகம காரணத்த தெரிஞ்சிக்கோங்க!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
’என் வாழ்க்கைக்கு ஒரு காதல் கடிதம்’.. விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யாவின் இன்ஸ்டா பதிவு!
ஆந்திரா : நடிகர் நாக சைத்தன்யா, விவாகரத்துக்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என் வாழ்க்கைக்கு ஒரு காதல் கடிதம் என பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது
நாக சைதன்யா தெலுங்கு திரையுலகில் மிகவும் பிஸியாகி நடித்து வருகிறார்.
அட கடவுளே..நேத்துதானே கடமை தவற மாட்டேன்னு சொன்னீங்க.. அப்போ இந்த வாரம் பிக்பாஸ்? கவலையில் ஃபேன்ஸ்?
விவாகரத்தால், தீவிர மன அழுத்தத்தில் இருந்த சமந்தா ஆன்மீக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

பல ஹிட் படங்களில்
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவருக்கும் நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தனர். பாணா காத்தாடி திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமான சமந்தா நீ தானே என் பொன்வசந்தம், மர்சல், சூப்பர் டீலக்ஸ், தெறி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

கோவாவில் திருமணம்
தெலுங்கில் சமந்தாவின் அறிமுகப் படமே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நாக சைதன்யாவுடன் நடித்தார். அதன் பிறகு சில படங்களில் ஒன்றாக நடித்தவர்களின் நட்பு காதல் ஆனது. 2017-ம் ஆண்டு இருவருக்கும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைகளின்படி கோவாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

விவாகரத்து
சமந்தா, பல்வேறு கனவுகளோடு மணவாழ்க்கையை தொடங்கிய இருவரும் சில நாட்களுக்கு முன்பு தங்கள் விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகமாக ஆராய்வதும் பேசுவதும் நம் சமூகத்திற்கு புதிதல்ல என்றாலும் சமந்தா விஷயத்தில் , சமந்தா குறித்து இணையத்தில் சர்ச்சைக்குரிய பல கருத்துக்கள் பரவியதால் மனதளவில் பாதிக்கப்பட்டார்.

வாழ்க்கைக்கான காதல் கடிதம்
சமந்த குறித்து பரவிய அனைத்து சர்ச்சைகளுக்கும் எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாகவே இருந்தார் நாக சைதன்யா, அதே போல இணையத்தில் பெரியதாக ஆக்டிவாக இல்லை. இந்நிலையில் , நீண்ட நாட்களுக்கு பிறகு அதாவது விவாகரத்து அறிவிப்பு பிறகு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் greenlights புத்தகத்தை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும், இது வாழ்க்கைக்கான காதல் கடிதம். உங்களின் பயணத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேத்யூ. இது எனக்கு கிரீன் லைட் போன்றது என்று நாக சைதன்யா அதில் எழுதி உள்ளார்.

குழம்பிய ரசிகர்கள்
நாச சைத்தான்யாவின் இந்த பதிவுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இருப்பினும் இந்த பதிவுக்கு ஏராளமானோர் லைக்குகளை கொடுத்து வருகின்றனர்