ஷூட்டிங் இல்லை... வீட்டில் உட்கார்ந்து ஊறுகாய் செய்ய கற்றுக் கொண்ட ஹீரோ... வைரலாகும் வீடியோ!

By

ஐதராபாத்: ஊரடங்கு நாளன்று வீட்டில் அம்மாவுடன் சேர்ந்து ஊறுகாய் செய்துள்ள ஹீரோவின் வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் இயக்கிய தியா மூலம் தமிழில் அறிமுகமானவர், நாக சவுரியா. இதில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார்.

தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நாக சவுரியா, நர்த்தனசாலா, அஸ்வத்தமா, சலோ ஆகிய படங்களை தயாரித்தும் உள்ளார்.

தமிழகத்தில்

தமிழகத்தில்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முந்நூறுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பு ரத்து

படப்பிடிப்பு ரத்து

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டி.வி.சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், நடிகர், நடிகைகள் வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்நிலையில், நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும், எனவே, வரும் 22 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை கடை பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறி இருந்தார். அத்தியாவசிய பணிகளைத் தவிர்த்து வேறு எதற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

உருப்படியாக

அதன்படி, இந்தியா முழுவதும் நேற்று ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் காலை 7 மணியில் இருந்து இரவு 9 வரை வீட்டுக்குள்ளேயே இருந்தனர். இந்நிலையில் வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பதற்கு பதிலாக உருப்படியாக ஒரு வேலை செய்திருக்கிறார், ஹீரோ நாக சவுரியா. அதாவது அம்மாவுடன் இணைந்து ஊறுகாய் செய்திருக்கிறார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார், நாக சவுரியா.

மாங்காய் ஊறுகாய்

மாங்காய் ஊறுகாய்

ஊரடங்கு நாளான நேற்று சினிமா நட்சத்திரங்கள், குடும்பத்துடன் நேரத்தை எப்படி செலவிட்டார்கள் என்று வீடியோவாக வெளியிட்டு இருந்தனர். இதில் நாகசவுரியா மாங்காய் ஊறுகாய் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அம்மாவிடம் இருந்து மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் கமென்ட் அடித்துள்ளனர்.

More from Filmibeat

Read more about: actor நடிகர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X