ரஜினிக்கு வில்லனாக நடிக்கணுமா?.. சான்ஸே இல்லை.. மறுத்துவிட்ட நாகார்ஜுனா?
சென்னை: ரஜினிகாந்த் இப்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பித்திருக்கும் சூழலில் அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
ஜெயிலர் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினி. இதில் அவருடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் முடிந்து இப்போது டப்பிங் பணிகள் தொடங்கியிருக்கின்றன. சமீபத்தில்தான் அபிராமி தனக்கான டப்பிங் பணியை தொடங்கினார். அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கூலி: வேட்டையன் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கமல் ஹாசனுக்கு விக்ரம் என்ற படத்தை மெகா ஹிட்டாக கொடுத்தது போல் கூலி படத்தையும் லோகேஷ் மெகா ஹிட் படமாக கொடுப்பார் என்று ரசிகர்கள் இப்போதே ஆரூடம் கூற ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எல்சியூ ஃபார்முலா: லோகேஷ் கனகராஜ்தான் இப்போது தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இயக்குநர். எல்சியூ என்று ஒரு சினிமாட்டிக் யுனிவெர்ஸையும் அவர் கையில் எடுத்திருக்கிறார். விக்ரம் படத்துக்கு அது ஒர்க் அவுட் ஆனாலும் கடைசியாக லோகி இயக்கிய லியோ படத்தில் ஒர்க் அவுட் ஆகவில்லை. குறிப்பாக அந்தப் படத்தில் வேண்டுமென்றே எல்சியூவை திணித்திருக்கிறார் என்ற விமர்சனத்தையும் ரசிகர்கள் ஓபனாக வைத்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
முக்கியமான படம்: லோகேஷ் இதுவரை இயக்கிய படங்களிலேயே லியோ படம்தான் மோசமான விமர்சனங்களை பெற்றது. அதன் காரணமாக ரஜினிகாந்த்தை வைத்து இயக்கும் கூலி படத்தை அவர் முக்கியமான படமாகவே பார்க்கிறார். இந்தப் படத்தை வைத்து லியோவில் தன்னை விமர்சித்தவர்களுக்கு தரமான பதில் சொல்லும் முனைப்பில் உழைத்துவருகிறார். படத்தின் டைட்டில் டீசரும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது.
நாகார்ஜுனா மறுப்பு: இதற்கிடையே இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க முதலில் ஷாருக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்டோரிடம் லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் சொல்லப்பட்டது. இதனையடுத்து நாகார்ஜுனாவிடம் பேசியதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று கசிந்திருக்கிறது. அதாவது கூலி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நாகார்ஜுனா திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக யாரை வில்லனாக போடலாம் என்ற அடுத்தக்கட்ட யோசனையில் இருக்கிறாராம் லோகேஷ்.


Click it and Unblock the Notifications











