விஷ்ணுவர்தன்- 'தல' தெலுங்கு படத்தில் நாகர்ஜுனா, ரவி தேஜா!

By Siva

Nagarjuna and Anuska
அஜீத் குமாரை வைத்து விஷ்ணுவர்தன் எடுக்கும் படத்தில் தெலுங்கு ஹீரோக்களான நாகர்ஜுனா, ரவி தோஜா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

அஜீத் குமாரை வைத்து விஷ்ணுவர்தன் ஒரு படம் எடுக்கின்றார் என்றும், அதில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, அரவிந்த்சாமி, பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்றும் நாங்கள் செய்தி வெளியிட்டிருந்தோம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கிறார்களாம். தமிழில் தல இருக்கிறார் ஆனால் ஆந்திராவில் படத்தை ஓட்ட அங்குள்ள ஹீரோக்களை போட்டால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பு வட்டம் நினைத்தாம்.

அதன் விளைவு தற்போது தல படத்தில் தெலுங்கு ஹீரோக்களான நாகர்ஜுனா மற்றும் ரவி தேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தெலுங்கில் வெளியாகும் படத்தில் இந்த இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிககிறார்களாம். இன்னும் எத்தனை நட்சத்திரங்கள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரியலையே.

ஏ. எம். ரத்னம் மேற்பார்வையில், ஸ்ரீசத்யசாய் மூவீஸ் சார்பில் ரகுராம் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் வரும் 31ம் தேதி மும்பையில் துவங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X