மகள் வயது நடிகைக்கு லிப்லாக்.. இந்த வயசுல இதெல்லாம் தேவையா? பிரபல நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்!

லிப் லாக் காட்சிகளால் சர்ச்சையில் சிக்கியுள்ளது நாகார்ஜூனாவின் மன்மதுடு 2 பட டீசர்.

Recommended Video

Manmadhudu 2 Movie: மன்மதுடு 2 படத்தில் ரகுல் ப்ரீத் சிங் அப்பா வயது நடிகருக்கு ஜோடி- வீடியோ

சென்னை: மகள் வயது நடிகையுடன் லிப்லாக் காட்சிகளில் நடித்து விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் நடிகர் நாகார்ஜூனா.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நாகார்ஜூனா. தமிழில் ரட்சகன் படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த பல படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெற்றியடைந்ததால், இங்கும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது மன்மதுடு 2 படத்தில் நடித்து வருகிறார் நாகார்ஜூனா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் அக்‌ஷரா கௌடா நடித்துள்ளனர்.

லிப் லாக் காட்சி:

லிப் லாக் காட்சி:

இந்நிலையில், நேற்று முன்தினம் இப்படத்தின் டீசர் வெளியானது. அதில், இளம் பெண் ஒருவருக்கு நாகார்ஜூனா லிப் லாக் முத்தம் தருவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், அந்த நடிகையின் முகம் தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.

யூகம்:

யூகம்:

அவர் யாருக்கு முத்தம் தருகிறார் என்ற கேள்வி சமூகவலைதளங்களில் விவாதமானது. சிலர் அது ரகுல் எனவும், சிலர் அது அக்‌ஷ்ரா எனவும் மாறி மாறி யூகம் தெரிவித்துள்ளனர். வேறு சிலரோ அது அவர்கள் இருவருமே இல்லை எனக் கூறி வருகின்றனர்.

சர்ச்சை:

சர்ச்சை:

இது ஒருபுறம் இருக்க, வயதான காலத்தில் மகள் வயது நடிகையுடன் லிப் லாக் காட்சிகள் எல்லாம் ரொம்ப முக்கியமா என்று சிலர் கோபப்பட்டுள்ளனர். இதனால் இந்த டீசர் சர்ச்சையில் சிக்கி, டிரெண்டிங் ஆகியது.

டிரெண்டிங்:

நெகடிவ் விமர்சனங்களால் படத்தின் மீது மக்களின் கவனத்தை திருப்பவும், படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கவுமே இது போன்ற காட்சிகளை டீசரில் வைத்திருப்பதாக படக்குழு மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. எது எப்படியோ படக்குழு எதிர்பார்த்த மாதிரியே மன்மதுடு 2 டீசர் சமூகவலைதளத்தில் வைரலாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X