கூலி படத்தில் நான் தான் ஹீரோ.. ரஜினி ஓகே சொன்னாரான்னு லோகி கிட்ட கேட்டேன்.. நாகார்ஜுனா ‘நச்’ பேச்சு!
நடிகர் நாகார்ஜுனா, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'கூலி’ படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஆரம்பத்தில் தயங்கிய நாகார்ஜுனா, லோகேஷ் கதை சொன்ன விதத்தையும், வில்லன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததையும் கண்டு வியந்தார்.
"லோகேஷ் கதை சொல்லும்போதே, இதை ரெக்கார்ட் பண்ணிக்கலாமான்னு கேட்டேன். ஒரு மணி நேரம் கதை சொன்னார். வீட்டுக்குப் போய் திரும்ப கேட்டேன். சில மாற்றங்கள் சொன்னேன். உடனே சிரிச்சுக்கிட்டே ஏத்துக்கிட்டார்," என்றார் நாகார்ஜுனா.

லோகேஷ் தன்னை அணுகிய விதம் குறித்து நாகார்ஜுனா பேசுகையில், "நீங்க வில்லனா நடிக்கிறீங்களான்னு கேட்டார். இல்லன்னா டீ குடிச்சிட்டு சினிமா பத்தி பேசலாம்னு சொன்னார். எனக்கு லோகேஷ் ரொம்ப பிடிக்கும். 'கைதி’ படம் பார்த்துருக்கேன். அப்பவே அவர்கூட வேலை செய்யணும்னு நினைச்சேன்" என்றார்.
'கூலி’ படத்தில் ரஜினி சாருடன் நடித்த அனுபவம் குறித்து கூறியபோது, ரஜினி படத்தில் நடிப்பது ஒரு பெரிய காம்ப்ளிமெண்ட். முதல் நாள் ஷூட்டிங்ல, நான் கேரவன்ல இருந்தேன். ரஜினி சார் உள்ள வந்து 'வெல்கம் டூ கூலி’னு சொன்னார். அது மறக்க முடியாத தருணம் என்றார்.
விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில் கதாபாத்திரங்கள் போல, இந்த வில்லன் கேரக்டரும் பேசப்படும் என்று நம்புகிறார் நாகார்ஜுனா. மேலும், லோகேஷ் ஒருமுறை அல்ல ஏழு முறை கதை சொன்னதாகவும், ஒவ்வொரு முறையும் இம்ப்ரூவ்மெண்ட் இருந்ததாகவும் நாகார்ஜுனா குறிப்பிட்டார்.
படப்பிடிப்பில் ரஜினி அவர்களின் அர்ப்பணிப்பைக் கண்டு வியந்ததாக நாகார்ஜுனா கூறினார். "அவர் இன்னும் scene-க்கு முன்னாடி பிராக்டிஸ் பண்ணுவார். எப்படி நடிக்கணும்னு யோசிப்பார். க்ளைமாக்ஸ் சீன்ல கூட சின்ன சின்ன improvise பண்ணி சொன்னார். அவர்கிட்ட நிறைய கத்துக்கலாம்" என்று ரஜினியைப் புகழ்ந்தார் நாகார்ஜூனா.
இறுதியாக, இந்த படத்தில் நான் தான் ஹீரோ என்றும், லோகேஷ் தனக்கு ஒரு நெகட்டிவ் ரோல் கொடுத்தாலும், இது ஒரு பாசிட்டிவ்வான அனுபவம் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் நாகார்ஜுனா. மேலும், ரஜினி சார் இந்த ரோல் நான் பண்ண ஓகே சொல்லிட்டாரா என்று தான் லோகேஷிடம் கேட்டேன். ஏனென்றால், ஹீரோவுக்கு இணையான ரோல் என்னுடைய ரோல் என்றார். அத்துடன் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக தனுஷின் குபேரா படத்திலும் நாகார்ஜுனா முக்கிய ரோலில் நடித்திருந்தார். அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியிலும் தனுஷ் அல்ல நான் தான் படத்தின் ரியல் ஹீரோ என நாகார்ஜுனா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் குபேரா படம் வசூலில் தூள் கிளப்ப காரணமே கிங் நாகார்ஜுனா தான்.
ஜூனியர் என்டிஆர், ஹ்ரித்திக் ரோஷன் நடித்துள்ள வார் 2 திரைப்படம் மற்றும் ரஜினிகாந்தின் கூலி படங்கள் டோலிவுட்டிலும் மெகா கிளாஷை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











