மருமக வந்த நேரம்.. தன் வயசுக்கேற்ற ரோலை தேர்வு செய்ய ஆரம்பித்த நாகார்ஜூனா!
ஐதராபாத்: முன்னணி தெலுங்கு நடிகரான நாகார்ஜூனா தனது மகன்கள் நாக சைதன்யா, அகில் ஆகியோர் சினிமாவில் நடிக்க வந்த பிறகும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
'தோழா' படத்தைப்போன்று தனது வயதுக்கும், அனுபவத்திற்கும் ஏற்ற மெச்சூரிட்டியான கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் நாகார்ஜூனா. மேலும், தனது மருமகள் சமந்தாவுடன் இணைந்து நாகார்ஜூனா நடித்திருந்த 'ராஜூ காரி காதி-2' படம் கடந்த 13-ம் தேதி வெளியானது.

இந்நிலையில், அடுத்தபடியாக ஜனவரி மாதம் ஷூட்டிங் தொடங்கும் புதிய படத்தில் நானியுடன் இணைந்து நடிக்கிறார் நாகார்ஜூனா. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்ரீராம் ஆதித்யா இயக்குகிறார்.
கடந்த சில மாதங்களாகவே தனது மகன் நாகசைதன்யா - சமந்தாவின் திருமண வேலைகளில் பிஸியாக இருந்து வந்த நாகார்ஜூனா, ரிலாக்ஸ் செய்வதற்காக சில நாட்களுக்கு வெளிநாடு செல்லப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











