"கலகலப்பு" நாகேஷ் பேரன் கஜேஸ் நாயகனாக நடிக்கும் ‘கல்கண்டு’

சென்னை: மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமாக கஜேஸ் நாயகனாக நடித்து வரும் படம் தான் கல்கண்டு.

நகைச்சுவைக் கதாபாத்திரங்கள் மட்டுமின்றி குணச்சித்திர வேடங்கள் மூலமும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் நாகேஷ். இவரது மகனான ஆனந்தபாபு, தந்தை வழியில் காமெடியனாக ஆகாமல் நாயகனாக நடித்து வந்தார்.

நடிப்போடு, தனது டிஸ்கோ நடனத்தாலும் பெரிதும் பேசப்பட்டார் ஆனந்த்பாபு. சுமார் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ஆனந்தபாபு. இப்போது மூன்றாவது தலைமுறையாக அவரது மகன் கஜேஸும் நடிகராகியுள்ளார்.

கல்கண்டு...

கல்கண்டு...

நந்தகுமார் இயக்கத்தில் கல்கண்டு படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் கஜேஸ். இவருக்கு ஜோடியாக டிம்பிள் நடிக்கிறார். இது தவிர மனோபாலா, மயில்சாமி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு...

படப்பிடிப்பு...

அப்படியே தந்தை ஆனந்தபாபுவின் ஜெராக்ஸ் காப்பி போல் இருக்கிறார் கஜேஸ். எந்த வித விளம்பரமும், ஆர்ப்பாட்ட அறிமுகமும் இல்லாமல் அமைதியாக நடந்து வருகிறது இப்படத்தின் படப்பிடிப்பு.

பிரம்மாண்ட விழா...

பிரம்மாண்ட விழா...

அதேசமயம், படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் மகனின் அறிமுக விழாவையும் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறாராம் ஆனந்த்பாபு.

கஜேஸின் அறிமுகம்...

கஜேஸின் அறிமுகம்...

நாகேஷை அறிமுகப்படுத்திய கே.பாலச்சந்தரே கஜேஸையும் அறிமுகப்படுத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3ம் தலைமுறை...

3ம் தலைமுறை...

ஏற்கனவே, முத்துராமனின் பேரன் கௌதம் கார்த்திக், சிவாஜி கணேசனின் பேரன் விக்ரம் பிரபு என மூன்றாம் தலைமுறை நாயகர்களாக நடித்து வரும் நிலையில், கஜேஸும் வெற்றிப் பட நாயகனாக வலம் வருவாரா என்பதை கல்கண்டு தான் சொல்ல வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X