சூட்டிங் ஸ்பாட்டில் தேவயானிதம்பி கை முறிவு
தேவயானியின் தம்பியும், ஹீரோவுமான நகுலனுக்கு படப்பிடிப்பின் கை முறிந்தது.
பாய்ஸ் படத்தில் 4 தம்பிகளில் ஒருவராக அறிமுகமானவர் தேவயானியின் தம்பி நகுலன். ஆனால், படம் தியேட்டர்களை விட்டு ஓடிய வேகத்தில் நகுலனும் சினிமாவை விட்டு ஓடினார்.பாய்ஸில் டொங்கு மாதிரி இருந்தவர் ஜிம் பக்கமாக ஒதுங்கி கும் ஆகி திரும்பி வந்தார். இப்போது காதலில் விழுந்தேன் படத்தில் ஹீேராவாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஆந்திரத்து சுனைனா நடிக்கிறார்.
அட்லாணடிக் சினிமா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை பிரசாத் இயக்குகிறார்.
இரு தினங்களுக்கு முன் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு சுரங்கப் பாதையில் இரவு நேரத்தில் சூட்டிங் நடந்துக் கொண்டிருந்தது.
அப்போது பிளாட்பாரத்திலிருந்து ஹீரோ ஓடி வந்து சுரங்க பாதைக்குள் விழுவது போல் காட்சி படமாக்கப்பட்டது.
ஸ்டண்ட் மாஸ்டர் பிரகாஷ் காட்சியை அமைத்து கொண்டிருந்தார். 50 அடி உயர கிரேனிலிருந்து நகுலனை தூக்கி போட்டனர்.
கீழே விரிக்கப்பட்ட மெத்தை மீது விழு வேண்டிய அவர் தவறுதலாக தரையில் வந்து விழுந்தார். தலையில் அடிபடாமல் இருக்க கையை ஊன்றியதில் இடது கை எலும்பு முறிந்தது.
இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஒரு மாதம் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுனர். இதனால் சூட்டிங் கேன்சலாகியுள்ளது.
இப்போதைக்கு நகுலன் தவிர்த்த பிற காட்சிகளை எடுக்கப் போகிறார்களாம்.


Click it and Unblock the Notifications