விஷால், பிரசன்னாவைத் தொடர்ந்து தொலைக்காட்சிக்கு வரும் நகுல்
சென்னை: விஷாலைத் தொடர்ந்து நடிகர் நகுலும் சின்னத்திரைக்கு வருகிறார்.
தொலைக்காட்சி சேனல்கள் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த பல்வேறு யுக்திகளைக் கையாளுகின்றன. அதில் ஒரு பகுதியாக நடிகர்களை ரியாலிட்டி ஷோக்களுக்கு விருந்தினராகவும், தொகுப்பாளராகவும் நியமிக்கின்றனர்.

விஷால், வரலட்சுமி, கரு பழனியப்பன், ஸ்ருதி ஹாசன், பிரசன்னா போன்றவர்கள் தொகுப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் நிலையில், இப்போது நடிகர் நகுல் ஒரு நடன நிகழ்ச்சிக்கு ஜட்ஜாக வரவுள்ளார்.
நகுலின் நடனத்திறனுக்கு நாக்க முக்க... பாடலுக்குஅவர் போட்ட குத்தாட்டமே மிகச்சிறந்த உதாரணம். பிரபல தனியார் தொலைக்காட்சியில் டான்ஸ் vs டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. அதற்கு ஜட்ஜாக நகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சி பற்றி பேசிய நகுல், ஏற்கனவே சில தொலைக்காட்சி வாய்ப்புகள் வந்ததாகவும், ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஃபார்மட் பிடித்திருந்ததால் இதற்கு சம்மதித்ததாகவும் கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நடன இயக்குனர் பிருந்தாவுடன் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சி எனவும் அவர் குறிப்பிட்டார்.
நகுல் தற்போது சுனைனாவுடன் சேர்ந்து எரியும் கண்ணாடி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்திற்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. காதலில் விழுந்தேன், மாசிலாமணி படங்களுக்குப் பிறகு இருவரும் இப்படத்தில் இணைகின்றனர்.


Click it and Unblock the Notifications











