Exclusive : ‘நாக்க மூக்க’ ஒரு மேஜிக்... விஜய் ஆண்டனியால் கூட அதைத் திரும்ப செய்ய முடியாது: நகுல்

செய் ஒரு ஜாலியான படம் என்று நடிகர் நகுல் கூறியுள்ளார்.

Recommended Video

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நகுல் வைரல் பேட்டி | Nakul Exclusive Interview

சென்னை: நாக்க மூக்க பாடல் ஒரு மேஜிக் போன்றது என கூறியுள்ளார் நடிகர் நகுல்.

பாய்ஸ் படத்தில் முள்ளம்பன்றி தலையுடன் ஜூஜூவாக அறிமுகமானவர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர், காதலில் விழுந்தேன் படம் மூலம் ஹீரோவானார்.

மாசிலாமணி, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நகுல், தற்போது செய் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 23ம் தேதி வெளியானது. இது தவிர கலர்ஸ் சேனலில் நடன நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராகி இருக்கிறார் அவர்.

இந்நிலையில், தனது செய் படம் குறித்தும், தொலைக்காட்சி என்ட்ரி குறித்தும் பல்வேறு விஷயங்களை அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

சமூகப் பிரச்சினை:

சமூகப் பிரச்சினை:

"நான் நடித்துள்ள 'செய்' நவம்பர் 23ம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஒரு பேமிலி எண்டர்டெயினர் படம். ஜாலியாக பார்க்கலாம். அதே நேரம் படத்தில் ஒரு முக்கியமான சமூக பிரச்சினையை பற்றியும் பேசியுள்ளோம்.

மாஜிக்:

மாஜிக்:

செய் படத்தில் பாடல்கள் எல்லாமே சிறப்பாக வந்துள்ளன. ஓபனிங் சாங் மாஸாக இருக்கும். ஆனால் நாக்க மூக்க மாதிரி என் வாழ்க்கையில் வேறு எந்த பாடலும் அமையவில்லை. அது ஒரு மேஜிக். விஜய் ஆண்டனியாலும் கூட அதை திரும்ப செய்ய முடியாது.

டான்ஸ் நிகழ்ச்சி:

டான்ஸ் நிகழ்ச்சி:

தற்போது இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். மேலும் கலர்ஸ் டிவியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்கிறேன். இயல்பாகவே நான் ஒரு நல்ல டான்ஸர் என்பதால் இது எனக்கு பிடித்திருக்கிறது. சினிமாவில் இருந்து டிவிக்கு வந்தது ஒன்றும் பெரிய தவறில்லை. இதன் மூலம் எப்போதும் மக்களிடம் எனது முகத்தை காட்டிக்கொண்டே இருக்க முடியும்.

ஓவியாவின் நட்பு:

ஓவியாவின் நட்பு:

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவின் நட்பு கிடைத்தது. அவர் ஒரு அருமையான மனிதர். முதல் சந்திப்பிலேயே இருவரும் நண்பர்களாகிவிட்டோம். ஓவியாவுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகச்சிறந்த அனுபவம்.

சந்தோஷம்:

சந்தோஷம்:

பல ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். ஆனால் பெரிய உயரத்திற்கு போக முடியவில்லையே என நான் ஒரு நாளும் வருத்தப்பட்டது கிடையாது. நான் இப்போது இருக்கும் இடத்தை நினைத்து சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கை இனிமையாக இருக்கிறது", என்கிறார் நகுல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X