தோள் பட்டையில் வலி... பிரபல நடிகருக்கு 4 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை.. சோகத்தில் ரசிகர்கள்!

ஹைத்ராபாத்: தோள்பட்டையில் ஏற்பட்ட வலியை தொடர்ந்து பிரபல நடிகருக்கு 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகராக வலம் வருபவர் நண்டமுரி பாலகிருஷ்ணா. 61 வயதான நண்டமுரி பாலகிருஷ்ணா தெலுங்கு சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோலொச்சி வருகிறார்.

தெலுங்கில் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நந்தி விருது, சைமா விருது, சந்தோஷம் விருது என ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார்.

கால் தூசுக்கு சமம்

கால் தூசுக்கு சமம்

சமீபத்தில் தெலுங்கு டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் நண்டமுரி பாலகிருஷ்ணா, ஆஸ்கர் விருது வென்ற ஏஆர் ரஹ்மான் யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். மேலும் இந்த விருதெல்லாம் என் கால் தூசுக்கு சமம் என்றும் கூறி பரபரப்பை கிளப்பினார்.

'அகண்டா' படம்

'அகண்டா' படம்

இதனால் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்கு ஆளான நடிகர் நண்டமுரி பாலகிருஷ்ணா கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். தற்போதும் சினிமாவில் பிஸியாக உள்ள நடிகர் நண்டமுரி பாலகிருஷ்ணா, போயபதி சீனு இயக்கத்தில் உருவாகி வரும் 'அகண்டா' படத்தில் நடித்து வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

இதனை தொடர்ந்து கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார் நடிகர் நண்டமுரி பாலகிருஷ்ணா. இந்நிலையில் நடிகர் நண்டமுரி பாலகிருஷ்ணா ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

கடந்த ஆறு மாதகாலமாக பாலகிருஷ்ணாவுக்கு தோள்பட்டையில் வலி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீப நாட்களாக வலி அதிகரித்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

4 மணிநேரம் அறுவை சிகிச்சை

4 மணிநேரம் அறுவை சிகிச்சை

இடது தோள்பட்டையில் சுமார் நான்கு மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு பாலகிருஷ்ணா நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாலகிருஷ்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தகவலை அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X