Balakrishna Net Worth: அடிச்சா ஒன்றரை டன் வெயிட்... பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு அதவிட வெயிட்

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா இன்று 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என மாஸ் காட்டி வரும் பாலகிருஷ்ணாவுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

60 வயதை கடந்தாலும் ஆக்‌ஷனில் இளம் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் பாலய்யா தற்போது பகவந்த் கேசரி படத்தில் நடித்து வருகிறார்.

 Nandamuri Balakrishnas Net worth, salary, and Car collections details

தற்போது அவரது சம்பளம், சொத்து மதிப்பு, கார்களின் கலெக்‌ஷன் ஆகியவற்றை பார்க்கலாம்.

தலைசுற்ற வைக்கும் பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு
தெலுங்கு சூப்பர்ஸ்டார் மறைந்த NTR-இன் மகனான நந்தமுரி பாலகிருஷ்ணா இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பாலய்யாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அவரது வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து ஜெய் பாலய்யா என முழக்கமிட்டு வருகின்றனர்.

1974ம் ஆண்டு வெளியான தத்தம்மா கலா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலய்யா, கடந்த 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார். இதுவரை 107 படங்களில் நடித்துள்ளதுடன் தற்போது 108வதாக பகவந்த் கேசரி என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார். பஞ்ச் வசனம், ஆக்‌ஷன் என பாலய்யாவின் வெறித்தனமான நடிப்புக்கு டோலிவுட் ரசிகர்கள் சொக்கிக் கிடக்கின்றனர் எனலாம்.

கண் அசைவில் கார்கள் பறப்பது, ஒரே மிதியில் லாரியை புரட்டிவிடுவது என இதுபோன்ற வீர சாகசங்களை பாலய்யா செய்தால் தான் ரசிகர்கள் நம்புவார்கள் என சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாலய்யாவின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டி வருகின்றன. பாக்ஸ் ஆபிஸில் கிங்காக இருந்தாலும் ஒரு படத்துக்கு 20 முதல் 30 கோடி ரூபாய் தான் சம்பளமாக வாங்குகிறாராம்.

 Nandamuri Balakrishnas Net worth, salary, and Car collections details

சினிமா, விளம்பரம் போன்றவைகளில் நடிப்பதன் மூலம் ஆண்டுக்கு 70 முதல் 80 கோடி வரை வருமானமாக கிடைக்கிறதாம். அதேபோல், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வசிக்கும் பாலய்யாவின் வீட்டின் மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது, அரண்மனை மாதிரி கட்டமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டில் நீச்சல் குளம், ஜிம், லிப்ட் என சகல வசதிகளும் உள்ளதாம். இதுதவிர மேலும் பல இடங்களிலும் பாலகிருஷ்ணாவுக்கு வீடுகள் உள்ளதாம்.

அதேபோல், BMW 7 சீரிஸ், போர்ஸ் பனமேரா கார்களை தான் அதிகமாக பயன்படுத்துவாராம். இந்த இரண்டு கார்களுமே தலா 2 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ரேஞ்ச்ரோவர், பென்ஸ் போன்ற கார்களும் சொந்தமாக வைத்துள்ளாராம். ஒட்டுமொத்தமாக பாலகிருஷ்ணாவின் சொத்துமதிப்பு மட்டும் 600 கோடிக்கு மேல் இருக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X