நந்தனா-மனோஜ் கல்யாணம்? திருப்பாச்சி அருவாள தூக்கிகிட்டு வாடா வாடா,சிங்கம் பெத்த பிள்ளையினு சொல்லிக்கிட்டு வாடா வாடா என்று தாஜ் மகால் படத்தின் மூலம் மகா பில்ட்-அப்புடன்சினிமாவுக்கு வந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ்.ஆனால், பையன் தேறவில்லை. மனோஜ் மீது பாரதிராஜாவுக்கு பயங்கர பாசம். தனது சினிமா கம்பெனியைக் கூட மனோஜ்கிரியேஷன்ஸ் என்ற பெயரில் தான் வைத்துள்ள பாரதிராஜா.ஆனால், அந்த அதீத பாசத்தால், முதன் முறையாக கதையில் கோட்டை விட்டு, மியூசிக்கல்- பேண்டசி சப்ஜெக்ட் மாதிரிதாஜ்மகால் படத்தை எடுத்தார் பாரதிராஜா. இரு மலை கிராமங்களுக்கு இடையே நடக்கும் மோதல், அதில் வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடி படும்பாடு தான் கதை. கதை நல்ல கதை தான், அதை பாரதிராஜாவால் அழகாகவே சொல்லிருக்க முடியும், மனோஜ் இல்லாமல்இருந்திருந்தால்.மேலும் கிராமத்து மாடு மேய்க்கும் இளைஞன் ஜீன்ஸ் பேண்ட், நைக்கி சூவுமாக ஊர் சுற்றி வருவது, அவரால் காதலிக்கப்படும்பெண்ணாக நடித்த ரியா சென் ரொம்பக் குட்டிப் புள்ளையாக இருந்தார். (இப்போது இந்தியில் கவர்ச்சியில் பிளந்து கட்டிக்கொண்டிருக்கிறார்). படத்தில் ரியாலிட்டே சுத்தமாக இல்லாதால் மக்கள் ஆதரிக்கவில்லை.அமெரிக்காவில் செளத் புளோரிடா யுனிவர்சிட்டியில் தியேட்டர் ஆர்ட்ஸ் படித்துவிட்டு வந்த மகனை முதலில் மணிரத்னத்திடம்தான் அஸிஸ்டெண்டாக விட்டார் ராஜா. பின்னர் மகனை முன்னணி ஹீரோவாக்க நினைத்து, தாஜ்மகால் மூலம் கையை சுட்டுக்கொண்டார். அந்தப் படத்தால் ராஜாவுக்கு பயங்கர நஷ்டம்.போராட்டத்துப் பெயர் போன பாரதிராஜா அதையும் மீறி இன்னும் நல்ல படைப்புகளைத் தந்து கொண்டு தான் இருக்கிறார். தாஜ்மகாலுக்குப் பின் வாணி, பல்லவன், வருஷமெல்லாம் வசந்தம் (இதில் மனோஜுக்கு நல்ல பெயர் கிடைத்தது) ,பாரதிராஜாவின் ஈர நிலம் ஆகிய படங்களில் நடித்தாலும் மனோஜ் இன்னும் கோலிவுட்டில் காலூன்றவில்லை. இப்போது வசீகரன்(முதலில் சாதுர்யன் என்று பெயரிட்டார்கள்) என்ற படத்தில் நடிததுக் கொண்டிருக்கிறார்.அப்படியே இன்னொரு படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்கிறார்.வசீகரன் படத்தில் மனோஜுக்கு ஜோடியாக சக்ஸஸ் பட நாயகி நந்தனா நடிக்கிறார். சிவாஜியின் பேரன் துஷ்யந்துடன்அறிமுகமான அந்தப் படம் பெரும் தோல்வியடைந்துவிட்ட நிலையில், வேறு பட வாய்ப்புக்களே இல்லாமல் இருந்த நந்தனாநீண்ட இடைவெளிக்குப் பின் ஏபிசிடி, காலிங்கா, உன்னைக் கண்டேனடி ஆகிய படங்களில் மளமளவென புக் ஆனார்.அந்த வரிசையில் சமீபத்தில் நம்பியார் மற்றும் வசீகரன் ஆகிய படங்களும் நந்தனாவின் லிஸ்டில் சேர்ந்துவிட்டன. வசீகரனின் சேர்ந்து நடிக்கும் நந்தானா- மனோஜ் இடையே காதல் மலர்ந்துவிட்டதாம். சூட்டிங் ஸ்பாட்டில் காதல் வளர்த்தஇவர்கள் தகவலை வீடுகளிலும் சொல்லிவிட்டார்கள்.காதலுக்காக குரல் கொடுக்கும் பாரதிராஜா, உடனே காதலை ஒத்துக் கொண்டுவிட்டாராம். நந்தனா வீட்டிலும் ஓகேசொல்லிவிட்டார்களாம்.இதையடுத்து பாரதிராஜாவின் குடும்பத்தின் முறைப்படி கேரளாவுக்குப் போய் நந்தனாவை பெண் பார்த்துவிட்டு, அப்படியேபெண் கேட்டுவிட்டு வந்திருக்கிறார்களாம். மிக விரைவிலேயே திருமணமாம்.அப்பாவைப் போலவே மகனும் தந்தை மீது பயங்கர பாசம் வைத்திருக்கிறார். தனது பெயரை மனோஜ்.கே. பாரதி என்று தான்எதிலும் குறிப்பிடுகிறார்.

By Staff

திருப்பாச்சி அருவாள தூக்கிகிட்டு வாடா வாடா,

சிங்கம் பெத்த பிள்ளையினு சொல்லிக்கிட்டு வாடா வாடா என்று தாஜ் மகால் படத்தின் மூலம் மகா பில்ட்-அப்புடன்சினிமாவுக்கு வந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ்.

ஆனால், பையன் தேறவில்லை. மனோஜ் மீது பாரதிராஜாவுக்கு பயங்கர பாசம். தனது சினிமா கம்பெனியைக் கூட மனோஜ்கிரியேஷன்ஸ் என்ற பெயரில் தான் வைத்துள்ள பாரதிராஜா.

ஆனால், அந்த அதீத பாசத்தால், முதன் முறையாக கதையில் கோட்டை விட்டு, மியூசிக்கல்- பேண்டசி சப்ஜெக்ட் மாதிரிதாஜ்மகால் படத்தை எடுத்தார் பாரதிராஜா.


இரு மலை கிராமங்களுக்கு இடையே நடக்கும் மோதல், அதில் வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடி படும்பாடு தான் கதை. கதை நல்ல கதை தான், அதை பாரதிராஜாவால் அழகாகவே சொல்லிருக்க முடியும், மனோஜ் இல்லாமல்இருந்திருந்தால்.

மேலும் கிராமத்து மாடு மேய்க்கும் இளைஞன் ஜீன்ஸ் பேண்ட், நைக்கி சூவுமாக ஊர் சுற்றி வருவது, அவரால் காதலிக்கப்படும்பெண்ணாக நடித்த ரியா சென் ரொம்பக் குட்டிப் புள்ளையாக இருந்தார். (இப்போது இந்தியில் கவர்ச்சியில் பிளந்து கட்டிக்கொண்டிருக்கிறார்). படத்தில் ரியாலிட்டே சுத்தமாக இல்லாதால் மக்கள் ஆதரிக்கவில்லை.

அமெரிக்காவில் செளத் புளோரிடா யுனிவர்சிட்டியில் தியேட்டர் ஆர்ட்ஸ் படித்துவிட்டு வந்த மகனை முதலில் மணிரத்னத்திடம்தான் அஸிஸ்டெண்டாக விட்டார் ராஜா. பின்னர் மகனை முன்னணி ஹீரோவாக்க நினைத்து, தாஜ்மகால் மூலம் கையை சுட்டுக்கொண்டார். அந்தப் படத்தால் ராஜாவுக்கு பயங்கர நஷ்டம்.

போராட்டத்துப் பெயர் போன பாரதிராஜா அதையும் மீறி இன்னும் நல்ல படைப்புகளைத் தந்து கொண்டு தான் இருக்கிறார்.


தாஜ்மகாலுக்குப் பின் வாணி, பல்லவன், வருஷமெல்லாம் வசந்தம் (இதில் மனோஜுக்கு நல்ல பெயர் கிடைத்தது) ,பாரதிராஜாவின் ஈர நிலம் ஆகிய படங்களில் நடித்தாலும் மனோஜ் இன்னும் கோலிவுட்டில் காலூன்றவில்லை. இப்போது வசீகரன்(முதலில் சாதுர்யன் என்று பெயரிட்டார்கள்) என்ற படத்தில் நடிததுக் கொண்டிருக்கிறார்.

அப்படியே இன்னொரு படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்கிறார்.

வசீகரன் படத்தில் மனோஜுக்கு ஜோடியாக சக்ஸஸ் பட நாயகி நந்தனா நடிக்கிறார். சிவாஜியின் பேரன் துஷ்யந்துடன்அறிமுகமான அந்தப் படம் பெரும் தோல்வியடைந்துவிட்ட நிலையில், வேறு பட வாய்ப்புக்களே இல்லாமல் இருந்த நந்தனாநீண்ட இடைவெளிக்குப் பின் ஏபிசிடி, காலிங்கா, உன்னைக் கண்டேனடி ஆகிய படங்களில் மளமளவென புக் ஆனார்.

அந்த வரிசையில் சமீபத்தில் நம்பியார் மற்றும் வசீகரன் ஆகிய படங்களும் நந்தனாவின் லிஸ்டில் சேர்ந்துவிட்டன.


வசீகரனின் சேர்ந்து நடிக்கும் நந்தானா- மனோஜ் இடையே காதல் மலர்ந்துவிட்டதாம். சூட்டிங் ஸ்பாட்டில் காதல் வளர்த்தஇவர்கள் தகவலை வீடுகளிலும் சொல்லிவிட்டார்கள்.

காதலுக்காக குரல் கொடுக்கும் பாரதிராஜா, உடனே காதலை ஒத்துக் கொண்டுவிட்டாராம். நந்தனா வீட்டிலும் ஓகேசொல்லிவிட்டார்களாம்.

இதையடுத்து பாரதிராஜாவின் குடும்பத்தின் முறைப்படி கேரளாவுக்குப் போய் நந்தனாவை பெண் பார்த்துவிட்டு, அப்படியேபெண் கேட்டுவிட்டு வந்திருக்கிறார்களாம். மிக விரைவிலேயே திருமணமாம்.

அப்பாவைப் போலவே மகனும் தந்தை மீது பயங்கர பாசம் வைத்திருக்கிறார். தனது பெயரை மனோஜ்.கே. பாரதி என்று தான்எதிலும் குறிப்பிடுகிறார்.

Read more about: nandhana and manoj in love
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X