சிம்புவை வைத்து பெரிய அளவில் சர்ச்சையை கிளப்ப துடிக்கும் இயக்குனர்
Recommended Video

சென்னை: சிம்பு 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் அவரின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க தயாராக இருப்பதாக இயக்குனர் நந்து தெரிவித்துள்ளார்.
கெட்டவன் படத்தில் நடிக்கப் போவதாக கடந்த 2008ம் ஆண்டு சிம்பு அறிவிப்பு வெளியிட்டது நினைவிருக்கிறதா? ஜி.டி. நந்து இயக்கவிருந்த அந்த படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது.

இந்நிலையில் கெட்டவன் மற்றும் சிம்பு பற்றி நந்து கூறியதாவது,
நான் தற்போதும் சிம்புவை வைத்து படம் எடுக்க விருப்பமாக உள்ளேன். நான் மட்டும் அல்ல சிம்புவின் ரசிகர்களும் கெட்டவன் படத்தை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
சிம்பு தயாராக இருந்தால் படத்தை ஆஸ்திரேலியாவில் எடுக்கக் கூட நான் தயாராக உள்ளேன். சிம்புவின் டேட்ஸ் கிடைத்தால் பிரமாண்ட படம் எடுக்க விரும்புகிறேன்.
ஒரு 10 நாட்களுக்கு சிம்புவின் கால்ஷீட் கிடைத்தால் அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கிவிடுவேன். இந்த படம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தும். இது மட்டும் நடந்தால் சிம்புவின் கெரியரில் இந்த படம் எவர்கிரீன் படமாக இருக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications











