»   »  மணிரத்னம் படத்தில் துல்கருக்கு பதில் நானி

மணிரத்னம் படத்தில் துல்கருக்கு பதில் நானி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் துல்கர் சல்மானுக்கு பதில் நான் ஈ நானி நடிக்கிறார்.

ஓ காதல் கண்மணிக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் போன்றோர் நடிப்பதாக முதலில் சொல்லப்பட்டது.

ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு டிசம்பர் முதல் ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் வந்தன.

Nani replaces Dulquar Salman

ஆனால் துல்கர் 2 மலையாளப் படங்களில் பிஸியாக இருப்பதால் அவரால் உடனடியாக மணிரத்னம் படத்துக்கு வர முடியவில்லை.

கிட்டத்தட்ட இரு மாதங்கள் காத்திருந்த மணிரத்னம், இப்போது துல்கருக்கு பதிலாக வேறு நடிகரை நடிக்க வைக்கும் முடிவுக்கு வந்துவிட்டாராம் மணி.

இந்த நிலையில் கடந்த வாரம் தெலுங்கு நடிகர் நானி மணிரத்னத்தைச் சந்தித்தார். புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க மணிரத்னம் கேட்ட கால்ஷீட்டை மொத்தமாகக் கொடுத்துவிட்டாராம்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கில் இருமொழிப் படமாக உருவாகிறது.

English summary
According to sources in the Kollywood, Nani of Naan Ee and Aaha Kalyanam fame has replaced Dulquer Salmaan in Mani Ratnam’s upcoming film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil