அம்மாவின் பிறந்தநாளுக்கு நானி செய்த காரியம்.. நெகிழ்ந்து பாராட்டிய ரசிகர்கள்!
ஹைதராபாத் : தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் நானி தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு செய்த காரியம் அவரையும் பாராட்ட வைத்துள்ளது.
தமிழில் வெப்பம், நான் ஈ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான நானி சமீபத்தில் வெளியான வி என்ற படத்தில் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.
இந்நிலையில் நேற்று தனது அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் நானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த புகைப்படம் ஒன்று அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

வில்லன் கதாபாத்திரத்தில்
தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் நானி இதுவரை பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் வெளியான வி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்ததோடு அவரது ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தார்.

சிறப்பு தோற்றம்
ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நானி தமிழில் வெப்பம் மற்றும் நான் ஈ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான நிலையில் அதைத்தொடர்ந்து ஆஹா கல்யாணம் மற்றும் சில திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் வந்து சென்றார்.

டக் ஜெகதீஷ்
தெலுங்கு ராசிகளுக்கு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களும் மிகவும் விரும்பும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நானி இப்பொழுது டக் ஜெகதீஷ் மற்றும் ஷாயாம் சிங் ராய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கதாநாயகிகள்
நானி நடித்த திரைப்படங்களிலேயே திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியான வி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது இயக்குனர் சிவ நிர்வனா இயக்கும் டக் ஜெகதீஷ் என்ற படத்தில் நடித்து வரும் நானி அதில் ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

நடிகை அனுபமா
டக் ஜெகதீஷ் திரைப்படத்தை தொடர்ந்து ஷ்யாம் சிங் ராய் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வர இதில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க தேர்வாகி இருக்கும் நிலையில் மேலும் அதில் நடிகை அனுபமா நடிக்க உள்ளதாக வெளியாகி உள்ளது.

காலில் விழுந்து ஆசிர்வாதம்
இந்நிலையில் நேற்று நானி தனது அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய கையோடு அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெரும் புகைப்படத்தை பகிர்ந்ததைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பாராட்டு மழை
பல கோடி ரசிகர்களை கொண்டு முன்னணி நடிகராக இருக்கும் நிலையிலும் தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதை பார்த்து நெகிழ்ந்த போன ரசிகர்கள் நானியின் அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியதோடு நானியின் இந்த செயலைப் பார்த்து பூரித்துப் போய் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











