சிங்கப்பூரில் குடும்பத்துடன் நெப்போலியன்.. திடீரென வந்து கட்டிக் கொண்ட பிரபலம்.. யாருன்னு பாருங்க!
சென்னை: அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு தனது மகனின் திருமணத்துக்காக சென்ற நெப்போலியன் இன்னமும் குடும்பத்துடன் டூர் அடித்துக் கொண்டுதான் இருக்கிறார். மகன் தனுஷுக்கு திருமணமாகி 100 நாட்கள் ஆகிவிட்டது என ஒரே கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் அவரை ஹிப் ஹாப் ஆதி சந்தித்த வீடியோவை சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் "பஞ்சு மிட்டாய் சீலை கட்டி பட்டு வண்ண ரவிக்கை போட்டு" என வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஆறடி உயர அய்யனாராக வலம் வந்த நெப்போலியன் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா பிசினஸ் மேனாக மாறிவிட்டார்.

தனது மகன் தனுஷுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்தே ஆக வேண்டும் என்கிற முனைப்புடன் மருமகளை தேடிப்பிடித்த நெப்போலியன் கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி ஜப்பானில் திருமணத்தை கோலாகலமாக செய்து வைத்தார்.
100 நாட்கள் ஆகிடுச்சு: நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கும் அக்ஷயா என்கிற பெண்ணுக்கும் திருமணமாகி 100 நாட்கள் ஆகிவிட்டதாக சமீபத்தில் நெப்போலியன் கொண்டாடிய காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. தனுஷுக்கு எல்லாம் திருமணமே ஆகாது என ஏளனமாக பேசியவர்கள் முன்பாக 100 நாட்களை வெற்றிகரமாக கடந்து இல்லற வாழ்க்கையை ஜாலியாக கொண்டாடி வருகிறார்.
சிங்கப்பூரில் நெப்போலியன் குடும்பம்: அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு சென்று திருமணத்தை முடித்த நிலையில், தற்போது சிங்கப்பூரில் ஜாலியாக குடும்பத்துடன் சுற்றுலா செய்து வருகிறார் நெப்போலியன். மனைவி, மகன்கள் மற்றும் மருமகளுடன் நெப்போலியன் சுற்றுலா செய்து வரும் நிலையில், அங்கே அவரை எதிர்பாராமல் ஹிப் ஹாப் ஆதி சந்தித்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.
நெப்போலியனை சந்தித்த ஹிப் ஹாப் ஆதி: அஸ்வின் ராம் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி, காஷ்மிரா பர்தேசி, நெப்போலியன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்ட பலர் நடித்த படம் தான் அன்பறிவு. அந்த படத்தில் ஹிப் ஹாப் ஆதியின் தாத்தாவாக நெப்போலியன் நடித்திருந்தார். இந்நிலையில், நெப்போலியனை சந்தித்ததுமே அவரை ஹிப் ஹாப் ஆதி கட்டியணைக்க தனது அன்பு முத்தங்களை நெப்போலியன் ஹிப் ஹாப் ஆதிக்கு கன்னத்தில் கொடுக்க, அவரது குடும்பத்துடன் நடத்திய சந்திப்பு காட்சிகளையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார் ஹிப் ஹாப் ஆதி.


Click it and Unblock the Notifications











