விஜய்யை செமயாக கலாய்த்த TN 2026.. விஜய் பார்த்தால் என்ன சொல்வார்?.. நட்டி நட்ராஜ் ஓபன் டாக்

சென்னை: தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிஸியான கேமராமேன் நட்டி என்கிற நட்ராஜ். அவர் கேமரா மேனாக மட்டுமின்றி ஹீரோவாகவும் கலக்கிவருகிறார். இப்போது அவரது நடிப்பில் TN 2026 என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது. உமாபதி படத்தை இயக்க; இளவரசு, தம்பி ராமைய்யா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இதன் ட்ரெய்லர் நேற்று வெளியானது. அதை பார்க்கையில் படத்தில் விஜய், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரை கலாய்த்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அதுகுறித்து நட்டி ஓபனாக பேசியிருக்கிறார்.

பாலிவுட்டில் கேமரா மேனாக தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர் நட்டி என்கிற நட்ராஜ். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அவர்; ஹிந்தியில் அறிமுகமான பிறகு; தமிழில் யூத் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அப்படத்துக்கு பிறகு மீண்டும் ஹிந்திக்கு சென்றுவிட்டார். அங்கே அனுராக் காஷ்யப், ராம் கோபால் வர்மா உள்ளிட்ட பல இயக்குநர்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக மாறினார். ஏகப்பட்ட படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அவரது கேமரா ஒர்க்கும் அபாரமாக பேசப்பட்டது.

Nataraj s TN 2026 Teaser Takes Aim at Vijay s Politics Actor Responds
Photo Credit:

மீண்டும் தமிழில்: ஹிந்தியிலேயே கேமரா செய்துகொண்டிருந்த அவர் தமிழுக்கு எப்போது வருவார் என்ற ஆவல் இருந்தது. துப்பாக்கி படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய; வெண்ணிலவே பாடலுக்கு மட்டும் நட்டி ஒளிப்பதிவு செய்திருந்தார். அதுவே அவ்வளவு ரிச்சாக, ஃப்ரெஷ்ஷாக இருந்தது. தொடர்ந்து தமிழில் விஜய் நடித்த புலி படத்தில் கேமரா மேன் அவர்தான். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. இதுவரை தமிழில் அவர் மொத்தமே யூத், தமிழ் ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டுமே பணியாற்றியுள்ளார்.

நடிகராக பிஸி: கேமரா மேனாக கலக்கிவந்த அவர் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். அந்தவகையில் அவர் நடித்த மிளகாய், முத்துக்கு முத்தாக படமெல்லாம் சுமார் வரவேற்பை பெற்றன. அடுத்ததாக வந்த சதுரங்க வேட்டை திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதுமட்டுமின்றி அவரை முழு நேர நடிகராகவும் மாற்றியது. கர்ணன் படத்தில் கொடூரமான இன்ஸ்பெக்டர் கேரக்டரில் எல்லாம் அட்டகாசப்படுத்திவிட்டார். தொடர்ந்து ஹீரோவாகவும், வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் கலக்கிவருகிறார் அவர்.

Also Read
விஜய்யை செல்லமாக திரிஷா எப்படி கூப்பிடுவார் தெரியுமா?.. கில்லி டைமிலிருந்தே அப்படித்தானாம்
விஜய்யை செல்லமாக திரிஷா எப்படி கூப்பிடுவார் தெரியுமா?.. கில்லி டைமிலிருந்தே அப்படித்தானாம்

TN 2026: சூழல் இப்படி இருக்க அவர் இப்போது TN 2026 என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.உமாபதி ராமயா படத்தை இயக்கியிருக்கிறார். ஏப்ரல் 10ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. இதன் டீசர் நேற்று வெளியானது. அதில் விஜய்யின் அரசியல் பிரவேசம், புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோரை எல்லாம் சரியாக கலாய்த்துவிட்டார்கள். நேற்றிலிருந்து சோஷியல் மீடியாவில் இதுதான் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.

நட்டி பேட்டி: இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான்தான் அதில் நடித்தேன். இதனை விஜய் பார்த்தாலுமே எதுவும் சொல்லமாட்டார். இதில் மொத்தம் நான்கைந்து கெட்டப்புகள் இருக்கின்றன. அவருடைய தேவை என்ன, ஒரு தேவை முடிந்த பிறகு இன்னொரு விஷயத்துக்கு செல்வதுதான் கதை. கடந்த 50 வருடங்களாக நாம் பார்க்கும் வாழ்க்கையில் என்னென்ன அரசியல் என்பது குறித்து பேசியிருக்கிறோம். அது உண்மைக்கு நெருக்கமாகவும் இருக்கும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X