Karthik - அப்பாவின் பெயரே எனக்கு எமனாகிப்போனது.. நவரச நாயகன் கார்த்திக் பேட்டி
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த முத்துராமனுக்கு மகனாக பிறந்தவர் கார்த்திக். தந்தை பெரிய நடிகர் என்பதால் அவருக்கும் சினிமா மீது இயல்பாகவே ஆசை வந்துவிட்டது. நியூ காலேஜில் கல்லூரி படிப்பை முடித்த சிறு வயதிலிருந்தே சில்வர் ஸ்பூன் குழந்தையாக வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா மீது ஆர்வம் இருந்த கார்த்திக்கை இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். 1981ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில்தான் ராதாவும் நடிகையாக அறிமுகமானார் என்பது நினைவுகூரத்தக்கது. முதல் படத்திலேயே கார்த்திக் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக சிறந்த புதுமுக நடிகருக்கான தமிழ்நாடு மாநில அரசை விருதை அசத்தினார் கார்த்திக்.

தொடர் ஹிட்டுகள்: முதல் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு கார்த்திக்குக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமைந்தன. அதன்படி அவர் நடித்த அதிசய பிறவிகள், ஆகாய கங்கை, ரஜினியுடன் நடித்த நல்லவனுக்கு நலல்வன், நல்லதம்பி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதன் காரணமாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கும் அவர் வந்துவிட்டார். மேலும் சிறந்த நடிகர் என்ற பெயரையும் பெற்றார்.
மணி கூட்டணி: கார்த்திக்கின் கரியரில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மௌன ராகமும், அக்னி நட்சத்திரமும் ஆகும். மௌன ராகத்தில் கொஞ்ச நேரம் மட்டுமே நடித்திருதாலும் ஒட்டுமொத்தமாக ஸ்கோர் செய்திருப்பார் கார்த்திக். அதிலும் மிஸ்டர் சந்திரமௌலி என்று பூர்ணம் விஸ்வநாதனை அவர் கூப்பிடும் காட்சி எப்போதும் அழிக்க முடியாத க்ளாசிக். அதேபோல் அக்னி நட்சத்திரம் படத்திலும் தான் இரண்டாம் தாரத்தின் மகன் என்ற உணர்வில் அவர் நடித்திருந்த நடிப்பு பெரும் அப்ளாஸை அள்ளியது.
90களிலும் கலக்கிய கார்த்திக்: 80களில் மட்டுமின்றி 90களிலும் கலக்கினார் கார்த்திக். சுந்தர் சி இயக்கத்தில் அவர் நடித்த மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டாகின. மேலும் அந்தப் படத்தில் கவுண்டமணியுடன் கார்த்திக் அடித்த லூட்டிகள் இப்போதும் சிரிப்பு வரவைக்கக்கூடியவை. சத்யராஜுக்கு பிறகு கவுண்டமணியுடன் பக்காவாக செட் ஆன நடிகர் என்றால் அது கார்த்திக்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அவர் அரசியல் கட்சியையும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டாகும் பேட்டி: கார்த்திக்கின் நடிப்பு பலரையும் கவர்ந்தாலும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்திற்கு வரமாட்டார்; அவர் அந்தக் காலத்து சிம்பு என்று இப்போதும் திரைத்துறையில் பேசுவார்கள். இந்நிலையில் கார்த்திக் கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், "நான் சினிமாவுக்கு வந்தபோது என்னுடைய வயது 20 இருக்கும். ஆனால் எனது தோற்றமோ 15 வயதுபோல் இருந்தது. முத்துராமனின் மகன் என்ற அடையாளமே எனக்கு எமனாகி போனது.
எப்படியும் நடிப்பார்: ஏனெனில் முத்துராமனின் மகன் என்பதால் எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நான் நடித்துவிடுவேன் என்று இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அவர்களாகவே முடிவு எடுத்துக்கொண்டார்கள். அப்படி எனக்கு வந்த வாய்ப்புகளை மறுக்கும் துணிச்சலும் எனக்கு அப்போது இருக்கவில்லை. எனவே அந்தக் கதாபாத்திரங்களில் சரியாக நடிக்க முடியாமல் நான் திணறினேன். இவை அனைத்தையும் புரிந்துகொள்வதற்கே எனக்கு மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் எனக்கு பொருத்தமான வேடங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











