அய்யய்யோ பிரபல ஹீரோவுக்கு அமெரிக்காவில் விபத்து.. நல்ல காயமாம்.. கன்ஃபார்ம் செய்த டீம்

நியூயார்க்: அனுஷ்கா நீண்ட நாட்கள் கழித்து நடித்த படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி. அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்தான் நவீன் பொலிஷெட்டி. தெலுங்கு திரையுலகில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கிட்டத்தட்ட பத்து படங்கள்வரை நடித்திருக்கும் அவருக்கு கண்டிப்பாக நல்ல எதிர்காலம் இருப்பதாக ரசிகர்களும், தெலுங்கு திரையுலகத்தினரும் இப்போதே கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர். இந்தச் சூழலில் அவருக்கு அமெரிக்காவில் விபத்து ஏற்பட்டிருக்கிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் நவீன் பொலிஷெட்டி. அடிப்படையில் கட்டட பொறியாளரான இவர் லண்டனில் பணி செய்துவந்தார். இருந்தாலும் நடிப்பு மீது ஆர்வம் உடைய நவீன் லண்டனில் தான் பார்த்த வேலையை உதறிவிட்டு மும்பைக்கு வந்து வாடகை வீட்டில் வசிக்க தொடங்கினார். கை நிறைய சம்பளம் உள்ள வேலையை விட்டால் சராசரியானவரின் வீட்டில் என்ன எதிர்ப்பு வருமோ அதே எதிர்ப்புதான் நவீனுக்கும் வந்தது. இருந்தாலும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து சினிமாவில் நடிக்க சான்ஸ் தேடிவந்தார்.

Naveen Polishetty Met Accident In America Dallas Here are the details

கிடைத்த வாய்ப்பு: தொடர்ந்து தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்துகொண்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார். மேலும் யூட்யூப்களில் மோனோ ஆக்டிங் வீடியோக்களையும் போட்டுக்கொண்டிருந்தார். அப்படி அவரது சில வீடியோக்கள் 50 மில்லியன் பார்வைகளை கடந்தது. அதேபோல் அவரது விடாமுயற்சிக்கு பலனாக திரையுலக கதவு திறந்தது. அதன்படி கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்தின் மூலம் சிறிய ரோல் கிடைக்க அதை சிறப்பாகவே செய்தார்.

ஹீரோ நவீன்: தொடர்ந்து டி ஃபார் டொப்பிடி, நென்னோகடினே உள்ளிட்ட படங்களில் சிறிய சிறிய வேடங்கள் கிடைத்த நவீனுக்கு 2019ஆம் ஆண்டு வெளியான ஏஜெண்ட் சாய் ஸ்ரீநிவாஸ் அத்ரேயா என்ற காமெடி த்ரில்லர் படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அந்தப் படம் சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பை பெற்றது. மேலும் நவீனுக்கும் நல்லதொரு அடையாளம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் Chhichore படத்தில் நடித்த அவர் தெலுங்கில் ஜதி ரத்னலு என்ற படத்தில் நடித்தார்.

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி: சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் அனுஷ்காவுடன் மிஸ் ஷெட்டில் மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் நடித்தார். அனுஷ்கா பல வருடங்களுக்கு பிறகு ரீ எண்ட்ரி கொடுத்த படம் என்பதால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது. எல்லோரது எதிர்பார்ப்பும் அனுஷ்கா மீது இருக்க; ஸ்வீட் சர்ப்ரைஸாக நவீனின் நடிப்பு படத்தில் அட்டகாசமாக இருந்தது. படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து நவீனை குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக தெலுங்கில் மாற்றியிருக்கிறது. படத்தில் அவரது துறு துறு நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இப்போது அவர் அனகனகா ஒக்க ராஜு என்ற படத்தில் நடித்துவருகிறார்.

விபத்து: இந்நிலையில் நவீன் பொலிஷெட்டி அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் டல்லாஸ் மாகாணத்தில் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பே இந்த விபத்து நடந்திருந்தாலும் இப்போதுதான் விஷயம் வெளியே தெரியவந்திருக்கிறது. நவீனுக்கு விபத்து ஏற்பட்டதை அவருக்கு நெருக்கமான வட்டாரமும் உறுதி செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதான் நடந்தது: விபத்து குறித்து நவீனுக்கு நெருக்கமானவர்கள் தனியார் ஊடகம் ஒன்றிடம் பேசுகையில், "அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் நவீன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் கட்டுப்பாட்டை இழந்தார். இருப்பினும் தன்னால் முடிந்தவரை மீண்டும் பைக்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தார். ஆனால் அது முடியாததால் பைக்கிலிருந்து கீழே விழுந்துவிட்டார். அதன் காரணாக அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இது நடந்தது. இப்போது அவர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கிறார். விரைவில் குணமடைந்துவிடுவார்" என்றிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X