»   »  நயன்ஸுக்கு கை கொடுக்கும் தல!

நயன்ஸுக்கு கை கொடுக்கும் தல!

Subscribe to Oneindia Tamil

சிம்பு விவகாரத்தைத் தொடர்ந்து தெலுங்குக்கு இடம் பெயர்ந்த நயனதாரா, அஜீத்மூலமாக தமிழுக்கு மறு வருகை புரியவுள்ளார்.

ஐயா, சந்திரமுகி மூலம் ஓஹோவென உயர்ந்த நயனதாரா, வல்லவனில் நடிக்கஆரம்பித்தபோது அப்படியே புதுப் படங்களில் நடிக்காமல் முடங்கிப் போனார்.சிம்புவின் பேச்சைக் கேட்டு பல படங்களை நழுவ விட்ட அவர், அவரதுஆக்கிரமிப்பையும் மீறி நடித்த படங்கள்தான் ஈ, தலைமகன்.

இரு படங்களிலும் நயனதாராவின் நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றது. ஒரு வழியாகசிம்புவிடமிருந்து மீண்டு வந்த நயனதாரா, சிம்பு தரப்பின் மிரட்டல்களால் தெலுங்கில்அடைக்கலம் புகுந்தார்.

அங்கு அவர் நடித்துள்ள யோகி (கன்னடத்தில் வெளியான ஜோகியின் ரீமேக்தான்இது. தமிழில் பரட்டை என்கிற அழகுசுந்தரமாக உருமாறிக் கொண்டிருக்கிறது)நயனதாரா மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

தெலுங்கில் சில புதிய படங்கள் வந்துள்ள நிலையில் நயனதாராவின் கவனம்முழுவதும் தமிழிலேயே இருக்கிறதாம். என்ன இருந்தாலும் தமிழ் போல வராது என்றுநெருங்கியவர்களிடம் கூறிக் கொண்டிருக்கிறாராம் நயனதாரா.

மறுபடியும் தமிழில் முழு வீச்சில் நடிக்க ஆர்வமாக இருக்கும் நயனதாரா, தலஅஜீத்துடன் சமீபத்தில் தொலைபேசியில் பேசினாராம். உங்க அடுத்த படத்தில்எனக்கு நிச்சயம் வாய்ப்பு தர வேண்டும் என்று நெய்யொழுக அவர் பேசப் பேச தல,உருகி விட்டாராம்.

கண்டிப்பாக எனது அடுத்த படத்தில் நீங்கள்தான் ஜோடி என்று ரிசீவரில் அடித்துச்சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம்.

இதனால் நயன்ஸ் படு சந்தோஷமாகியுள்ளார். அஜீத்துடன் ஜோடி போட்டு தமிழ்சினிமாவில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்த ரெடியாகி வருகிறாராம்.

சிம்புவிடமிருந்து பிரிந்த நயனதாராவைப் பற்றி தெலுங்கில் ஒரு புரளிகிளம்பியுள்ளதாம். அதாவது யோகி படத்தின் ஹீரோ, பிரபாஸுடன் நயன்ஸுக்குபாசப் பிணைப்பு ஏற்பட்டுள்ளது என்பதுதான் அந்த செய்தியாம். ஆனால் நயன்ஸ்வழக்கம் போல இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் சாதிக்கிறார்.

புண்பட்ட மனசை இன்னொரு புண்ணை வைத்து ஆத்தப் போறாரோ?

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil