»   »  சிம்பு-நயன்ஸ் கவ்வு-ஆந்திர டென்சன்

சிம்பு-நயன்ஸ் கவ்வு-ஆந்திர டென்சன்

Subscribe to Oneindia Tamil

வல்லவன் படத்திற்காக நயனதாராவின் உதடுகளை கவ்வி சிம்பு கொடுத்த முத்தப் போஸ்டர் ஆந்திர பெண்கள்மத்தியில் பெரும் டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது.

சிம்புவின் இயக்கத்தில் நயனதாரா, ரீமா சென், சந்தியா ஆகியோரோடு ஜோடி சேர்ந்து அவர் நடித்துஉருவாகியுள்ள வல்லவன், தெலுங்கிலும் வல்லபா (வவை எடுத்து பவைப் போட்டு ன்ஐ வெட்டி, காலைச்சேர்த்து இழுத்தா தெலுங்கு டைட்டில் ரெடி!) என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

வல்லவன் பட பூஜையின்போது சிம்புவும், நயனதாராவும் படு ஆழமாக உதட்டைக் கடித்து தின்பது போன்றசூடான முத்தக் காட்சி அடங்கிய போஸ்டர்கள் சென்னை ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதை கிழித்துவீச உத்தரவிட்டது காவல்துளை.

இப்போது தெலுங்கில் வெளியாகியுள்ள வல்லபா படம் தொடர்பான போஸ்டர்களிலும் இந்த கவ்வா கவ்வாகாட்சியைத்தான் பிரதானப்படுத்தி ஒட்டியுள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள் முன்பும் இந்த போஸ்டர்கள்ஒட்டப்பட்டுள்ளது.

இது பெண்கள் அமைப்புகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆபாச போஸ்டர்களை அகற்ற வேண்டும் என பெண்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் யாரும்கண்டுகொள்ளவில்லை. பொறுத்துப் பார்த்த அனந்தபூர் நகர மகளிர் அமைப்பினர் மொத்தமாக கிளம்பி நகர்முழுவதும் ஒட்டப்பட்டிருந்த முத்த போஸ்டர்களை ஆவேசத்துடன் கிழித்து எறிந்தனர். மேலும் இப்படம்தொடர்பான பிற கவர்ச்சி போஸ்டர்களையும் கிழித்து எறிந்தனர்.

பின்னர் வல்லபா படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்குச் சென்ற பெண்கள், இப்படத்தின் ஆபாசமானபோஸ்டர்களை ஒட்டக் கூடாது என்று கோரி கோஷமிட்டனர். இந்தப் போராட்டத்தால் அனந்தபூரில் பரபரப்புஏற்பட்டது.

தமிழில்தான் கவ்வி போலீசாரிடம் கடி வாங்கினார் சிம்பு. அங்கேயுமா? திருந்தப்புடதாப்பா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil