லிப்ட்டுக்குள் விக்னேஷ் சிவனை மடக்கி கதை சொன்ன கவின்.. நயன் விக்கி தயாரிப்பில் தயாராகும் ஊர்குருவி!

சென்னை: பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த கவினின் லிப்ட் திரைப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நேரத்தில் கவினின் அடுத்த படம் குறித்த அசத்தலான அப்டேட் வீடியோ வெளியாகி ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடத்தி வரும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் ஹீரோ நம்ம கவின் தான்.

லிப்ட்டுக்குள் விக்னேஷ் சிவனை மடக்கி கவின் சொல்லும் கதை வீடியோ ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது.

விருதுகளை குவித்த கூழாங்கல்

விருதுகளை குவித்த கூழாங்கல்

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு ஏகப்பட்ட விருதுகளை அள்ளி குவித்து வருகிறது. இயக்கத்தை தாண்டி தயாரிப்பிலும் அதிக கவனத்தை விக்னேஷ் சிவன் செலுத்தி வருகிறார்.

நயன்தாராவின் சொந்த தயாரிப்பு

நயன்தாராவின் சொந்த தயாரிப்பு

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படத்தையும் இதே ரவுடி பிக்சர்ஸ் தான் தயாரித்து இருந்தது. சொந்த நிறுவனத்தின் படத்தை புரமோட் செய்ய விஜய் டிவியில் டிடியை வைத்து சிறப்பு பேட்டி கொடுத்து தனக்கும் காதலர் விக்கிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது பற்றி அறிவித்து இருந்தார் நயன்தாரா.

கவினின் அடுத்த படம்

கவினின் அடுத்த படம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் நடிப்பில் உருவான லிப்ட் திரைப்படம் சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி பேய் ஹிட் அடித்தது. விஜயதசமியை முன்னிட்டு விஜய் டிவியில் சிறப்புத் திரைப்படமாக லிப்ட் ஒளிபரப்பாகி வரும் நிலையில், கவினின் அடுத்த படம் குறித்த அசத்தல் அப்டேட் வெளியாகி கவின் ஆர்மியினரை கொண்டாட வைத்துள்ளது.

லிப்டில் மாட்டிய விக்னேஷ் சிவன்

கவின் இருக்கும் லிப்ட்டுக்குள் விக்னேஷ் சிவன் ஏற அவரை அப்படியே பிளான் பண்ணி மடக்கி பிடித்து ஒரு கதையையும் சொல்கிறார் கவின். அந்த கதைக்கு வேறு வழியே இல்லாமல் ஓகே சொல்வதாக விக்னேஷ் சிவன் பேசும் கலகலப்பான வீடியோவுடன் கவினின் அடுத்த படமான ஊர்குருவி படத்தின் அட்டகாச அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் அருண் இயக்குகிறார்.

டிரெண்டாகும் நயன்தாரா

டிரெண்டாகும் நயன்தாரா

விக்னேஷ் சிவன், கவின் ஊர்குருவி படம் குறித்த அப்டேட் வீடியோ வெளியானதும் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து அந்த படத்தை தயாரிக்க உள்ள நயன்தாரவின் ஹாஷ்டேக் ட்விட்டரில் வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது. நயன்தாரா லேட்டஸ்ட்டாக நடித்த விளம்பர புகைப்படங்களையும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

Recommended Video

Office Serialல் நடித்த Ashwin Kumar | Vijay Tv, Cook with Comali, Ashwin Sivangi
நயன்தாராவையே காட்டல

நயன்தாராவையே காட்டல

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் டீசர் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. கேஜிஎஃப் 2வில் போலீஸ் ஜீப்கள் பறந்த நிலையில், அண்ணாத்த டீசரில் லாரிகள் ஒவ்வொன்றாக பறக்க பறக்க ரஜினிகாந்த் ராஜநடை போட்டு வருகிறார். படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்பட ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும், ரஜினி மட்டும் தான் டீசர் முழுக்க நிறைந்திருந்தார். கடைசி வரை லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை காட்டலயே என நயன் ரசிகர்கள் சற்றே அப்செட் ஆகி இருந்தாலும், இது தலைவர் படம் அப்படித்தான் இருக்கும் என்கிற கமெண்ட்டுகளும் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X