எனக்கு ஏற்ற ஜோடி நயன்தாரா தான்: ஆர்யா
சென்னை: தனக்கேற்ற ஜோடி என்றால் அது நயன்தாரா தான் என நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள இரண்டாம் உலகம் படம் வரும் 22ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் தெலுங்கிலும் ரிலீஸாகிறது. தெலுங்கில் அனுஷ்காவுக்கு நல்ல மார்க்கெட் உள்ளதால் அங்கு படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆர்யா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

எப்படி தான் படமோ?
செல்வராகவன் என்னிடம் இரண்டாம் உலகம் படத்தின் கதையை கூறியபோது இதை எப்படித் தான் படமாக்கப் போகிறாரோ என்று நினைத்தேன். ஆனால் தற்போது படத்தை பார்த்தால் அதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. இத்தகைய பெரிய பட்ஜெட் மற்றும் லேசில்லாத கதையை படமாக்க நிறைய திட்டமும், தில்லும் வேண்டும் என்றார் ஆர்யா.

பெரிய நடிகரை எடுத்திருக்கலாம்
இரண்டாம் உலகம் எனது கெரியரின் மிகப் பெரிய படங்களில் ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். செல்வா நினைத்திருந்தால் வேறு ஹீரோக்களை நடிக்க வைத்திருக்கலாம். பெரிய பட்ஜெட் என்பதால் பெரிய ஹீரோவை நடிக்க வைத்திருந்திருக்கலாம். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்ததற்கு செல்வாக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நெகிழ்ந்தார் ஆர்யா.

நான் கடவுள்
நான் கடவுள், இரண்டாம் உலகம் என்று ஆண்டுக் கணக்கில் எடுக்கும் படங்களில் ஏன் நடிக்கிறீர்கள் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். பாலா, செல்வராகவன் ஆகியோர் ஆண்டுக் கணக்கில் படத்தை எடுப்பதற்காக நான் வருந்தவில்லை. ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக வர அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன் என்று ஆர்யா தெரிவித்தார்.

நயன்தாரா
எனக்கு பிடித்த நடிகை நயன்தாரா. அவர் தான் எனக்கேற்ற ஜோடி என்று ஆர்யா கூறினார். உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு தான் ஆர்யா இந்த பதிலை அளித்தரா்.


Click it and Unblock the Notifications











