நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வரும் நஸ்ரியா நசீம்.. சூர்யா 47 ஹீரோயின்.. ரொம்ப நாள் ஆச்சு
சென்னை: சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான ரெட்ரோ, கங்குவா ஆகிய இரண்டு படங்க்ளுமே தோல்வியைத்தான் சந்தித்தன. அதிலும் சிவா இயக்கத்தில் உருவான கங்குவா படம் படுதோல்வியை தாண்டி கடுமையான ட்ரோலையும் சந்தித்தது. இப்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து முடித்த அவர்; அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்திலும், ஆவேஷம் பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் சூர்யா. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதுவாகவே மாறிவிடக்கூடிய அவருக்கு கடந்த சில வருடங்களாக சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் எதுவும் அமையவில்லை. சிவா இயக்கத்தில் ஹை பட்ஜெட்டில் உருவான கங்குவா படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் அவர். ஆனால் ப்ரோமோஷனில் கொடுக்கப்பட்ட ஏகப்பட்ட பில்ட் அப்புகள் காரணமாக அந்தப் படம் தோல்வியையும், மோசமான ட்ரோலையும் சந்தித்தது.
ரெட்ரோவும் அடிதான்: அந்தப் படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்தார். சிவாதான் கைவிட்டுவிட்டார்; கார்த்திக் கண்டிப்பாக ஹிட் கொடுப்பார் என்று சூர்யா மட்டுமின்றி அவரது ரசிகர்களும் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள். இந்த வருடம் வெளியான ரெட்ரோவும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை. இதனால் சூர்யா ரசிகர்கள் அப்செட் ஆகிவிட்டார்கள்.

சூர்யாவின் கருப்பு: இரண்டு படங்களின் வரிசையான தோல்விக்கு பிறகு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக தெரிகிறது. வரிசையாக வாங்கிய தோல்விகளுக்கு கருப்பு படத்தில் பதிலடி கொடுக்க காத்திருக்கிறாராம் சூர்யா. அடுத்த வருடம் படமானது ரிலீஸாகவிருக்கிறது.
அடுத்த படங்கள்: கருப்பு படத்தை முடித்துவிட்டு லக்கி பாஸ்கர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்திலும், ஆவேஷம் பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்திலும் தனது 46 மற்றும் 47ஆவது படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த இரண்டு இயக்குநர்களும் மெகா ப்ளாக் பஸ்டரை கொடுத்தவர்கள் என்பதால்; இவர்களாவது சூர்யாவுக்கு இருக்கும் தோல்வி முகத்தை மாற்றி வைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஹீரோயின் யார்?: இந்நிலையில் சூர்யா 47 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகையும், ஃபகத் பாசிலின் மனைவியுமான நஸ்ரியா நசீம் நடிக்கவிருக்கிறார். மிகச்சிறந்த நடிகையான நஸ்ரியா தமிழில் நேரம், ராஜா ராணி, திருமணம் என்னும் நிக்காஹ், நய்யாண்டி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவற்றில் நய்யாண்டி படத்தின்போது தனக்கே தெரியாமல் தன்னை மார்ஃபிங் செய்து படக்குழு பாடல் காட்சியில் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டி சினிமாவிலிருந்து விலகியதும், பின்னர் ஃபகத் பாசிலை திருமணம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று அதாவது டிசம்பர் 7ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.


Click it and Unblock the Notifications











