என்னது கமல் மேஜிக் எல்லாம் செய்வாரா?.. நடிகை சொன்ன சூப்பர் சீக்ரெட்.. சகலகலா வல்லவன்னா சும்மாவா?

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான தக் லைஃப், இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களுமே அவரது கரியரில் மோசமான தோல்வியை சந்தித்த படங்கள் என்ற பெயரை பெற்றுவிட்டன. அடுத்ததாக ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க நடிகை நீலிமா ராணி கமல்ஹாசன் குறித்து பேசியிருக்கும் விஷயம் சோஷியல் மீடியாவில் அதீத கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சினிமாவில் படு பிஸியாக இருந்த கமல்ஹாசன் திடீரென அரசியலுக்கு சென்றார். அங்கே நினைத்த மாதிரி செயல்பட முடியவில்லை. எனவே கட்சியை கலைக்காமல் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்படம் கொடுத்த வெற்றியின் காரணமாக தெம்பாக உணர்ந்த அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகினார்.

Neelima Rani Recalls Working with Kamal Haasan on Thevar Magan Interview Goes Viral
Photo Credit:

ட்ரோலை சந்தித்த படங்கள்: அப்படி அவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்தார். இவர்கள் இருவருடன் சேர்ந்து ஏற்கனவே இந்தியன், நாயகன் என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் கமல். அதனால் பெரிய எதிர்பார்ப்பு படங்களுக்கு இருந்தது. ஆனால் இரண்டுமே படுதோல்வியை சந்தித்தது மட்டுமில்லாமல் அவரது கரியரிலேயே அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படங்களாக மாறிவிட்டன. அவற்றுக்கு விழுந்த அடி கண்டிப்பாக கமலுக்கு பெரிய தழும்பை கொடுத்திருக்கும்.

Also Read
கருப்பு படத்தில் விஜய்யை இமிட்டேட் செய்த திரிஷா?.. ஆஹா இது லிஸ்ட்லையே இல்லையே பாஸ்
கருப்பு படத்தில் விஜய்யை இமிட்டேட் செய்த திரிஷா?.. ஆஹா இது லிஸ்ட்லையே இல்லையே பாஸ்

அடுத்த படம்: சீனியர்களை நம்பி சென்று தோல்வியை கொடுத்ததால்; இப்போது இளம் இயக்குநர்கள் மீது கமலின் பார்வை திரும்பியிருக்கிறது. அந்தவகையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல சண்டை பயிற்சியாளர்களாக இருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் மிக விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக முந்தைய படங்கள் போல் இல்லாமல் இது வேறு மாதிரி இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

ரஜினியுடன் படம்: அதேபோல் தயாரிப்பிலும் படு பிஸியாக இருக்கும் அவர் ரஜீகாந்த்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார். அதை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்தார். ஆனால் அவர் வெளியேற சிபி சக்கரவர்த்தி உள்ளே வந்தார். அவரும் வெளியேறிவிட்டதாக இப்போது தகவல் வருகிறது. இது ஒருபக்கம் இருக்க மறுபக்கமோ ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள். அந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். இந்நிலையில் கமல்ஹாசன் பற்றி நடிகை நீலிமா ராணி பேசியிருக்கும் விஷயம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

நீலிமா ராணி பேட்டி: அவர் நடிகை குட்டி பத்மினிக்கு அளித்த பேட்டியில், "தேவர் மகன் படத்தில் நாசரை வெட்டுவதற்காக கமல் வீட்டுக்கு வருவார். என் கழுத்திலும் அரிவாளை வைப்பார். அதை எடுக்கும்போது என்னை உண்மையில் வெட்டப்போகிறார்களோ என்று நினைத்து அழுதேன். அப்போது கமல்தான் என்னிடம், 'இது உண்மையான அரிவாள் இல்லை. அட்டைதான்' என நிரூபித்தார். அதேபோல் க்ளைமேக்ஸில் அவரை கைது செய்து அழைத்து செல்லும் காட்சியை எடுத்தபோது அங்கே வைத்து எங்களுக்கு பல மேஜிக்குகளை எல்லாம் செய்து காண்பித்தார். அதெல்லாம் இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X