ரஜினி பட அறிவிப்பால் இணையத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள்... கலக்கல் காம்பினேஷனில் உருவாகும் படம்
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த படம் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்துள்ளது.
இந்தப் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் தற்போது ரஜினியின் அடுத்த படத்தையும் தயாரிக்கவுள்ளது.
நெல்சன் திலீப்குமார் படத்தை இயக்கவுள்ளார். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் தீபாவளி ரிலீசாக வெளியான படம் அண்ணாத்த. ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பூ, சூரி, சதீஷ், உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்திருந்தது. படத்தில் அண்ணன் -தங்கை பாசத்தை முதன்மை படுத்தியிருந்தார்.

அடுத்தப்பட அறிவிப்பு
இந்நிலையில் ரஜினியின் அடுத்தப்படம் என்னவாக இருக்கும் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் சமூக வலைதளங்களில் உலவி வந்தது. முன்பெல்லாம் ஒவ்வொரு படத்திற்கும் இடையில் இடைவெளி விட்டு அடுத்த பட அறிவிப்பை கொடுப்பார் ரஜினி. ஆனால் தற்போது உடனடியாக அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு
இதனால் தலைவரின் ரசிகர்கள் தொடர்ந்து குஷியாகி வருகின்றனர். மேலும் புதிய இயக்குநர்களுக்கும் ரஜினி தொடர்நது வாய்ப்புகளை அளித்து வருகிறார். இதன்மூலம் ரஜினியை வித்தியாசமான கெட்டப்புகளில் பார்க்க முடிகிறது. கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்துவந்த ரஜினியின் சிறப்பான நடிப்பை ரசிகர்கள் அனுபவித்து வருகின்றனர்.

169 பட அறிவிப்பு
கடந்த 168 படத்தை மிகச்சிறந்த வெற்றிப்படமாக்கியுள்ளார் இயக்குநர் சிவா. இதையடுத்து அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், தற்போது விஜய்யை இயக்கிவரும் நெல்சன் திலீப்குமார் ரஜினியை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் மகிழ்ச்சிப்பதிவு
இதுகுறித்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் மற்றும் அனிருத்துடன் மீண்டும் இணைவதும் பெருமகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் லவ் எமோஜிகளுடன் குறிப்பிட்டுள்ளார்.

அனிருத் இசை
இந்நிலையில் மீண்டும் தலைவருடன் இணைவது குறித்து அனிருத்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒரேயொரு தலைவர் என்றால் அது ரஜினிதான் என்றும் அவர் கூறியுள்ளார். பேட்ட படத்தில் முன்னதாக ரஜினிக்கு இசையமைத்துள்ளார் அனிருத். அந்தப் படத்தின் பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி
இதனிடையே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானவுடன் நடிகர் சிவகார்த்திகேயனும் இந்தப் படம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தலைவா என்று குறிப்பிட்டு நெருப்பு எமோஜிக்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாடல் எழுதுவாரா சிவகார்த்திகேயன்?
நெல்சனின் முந்தைய படங்களை போலவே இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் ரஜினிக்கு யார் ஜோடியாக நடிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விஜய் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொண்டுவரும் நெல்சன், அந்தப் படத்தை முடித்தவுடன் தலைவர் 169 படத்தை துவங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











