ஜெயிலர் 2வில் இவ்வளவு பெரிய ரிஸ்க்கா?.. ரஜினியை வைத்து நெல்சன் திலீப்குமார் செஞ்சது தெரியுமா?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்போது ஜெயிலர் 2வில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தின் முதல் பாகம் பெரிய ஹிட் என்பதால் இரண்டாவது பாகமும் அதே ரிசல்ட்டை பெற வேண்டும் என ஆவலோடு இருக்கிறார்கள் ரசிகர்கள். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவரும் சூழலில்; புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோரின் திரை வாழ்க்கையில் ஜெயிலர் திரைப்படம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் அப்படத்துக்கு முன்பாக ரஜினி நடித்த அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்களும், நெல்சன் இயக்கிய பீஸ்ட் படமும் படுதோல்வியை சந்தித்தன. இதன் காரணமாக ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டம் அவ்வளவுதான் என்றும், நெல்சனின் கரியர் க்ளோஸ் என்றும் பலரும் பலவிதமாக பேசினார்கள்.
மெகா ப்ளாக் பஸ்டர் ஜெயிலர்: முக்கியமாக நெல்சனுடன் ரஜினி இணைந்தபோது பெரும்பாலானோர் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தார்கள். ஆனால் ரஜினியோ முழுக்க முழுக்க நெல்சன் மீது நம்பிக்கை வைத்தார். படம் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது பாகம் உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகளில் இறங்கினார்.

ஜெயிலர் 2 அப்டேட்: கதை, திரைக்கதையை தரமாக உருவாக்கிவிட்டு ஷூட்டிங்கை தொடங்கினார் நெல்சன். ரஜினிகாந்த்தும் ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், பாலகிருஷ்ணா என பலர் நடிக்கிறார்கள். முதல் பாகத்தில் எடுத்த ரிசல்ட்டை இந்தப் பாகத்திலும் எடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் இயக்குநர்.
புதிய தகவல்: இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது ரஜினி நடிக்கிறார் என்றாலே அந்த ஷூட்டிங்கை பெரும்பாலும் செட் போட்டுதான் எடுப்பார்கள். பொது இடத்தில் ஷூட்டிங் நடத்தினால் அவரை பார்ப்பதற்கு கூட்டம் கூடி படப்பிடிப்புக்கு இடைஞ்சல் வரும் என்பதால் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் எடுக்கும் முடிவு அது. ஆனால் நெல்சான் திலீப்குமார் அந்த ஃபார்முலாவை உடைத்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
என்ன ஆனது?:அதாவது படத்தின் ஷூட்டிங் கேரளா மற்றும் சென்னையில் இடைவிடாமல் நடந்துவருகிறது. அப்படி சென்னையில் நடந்த ஷூட்டிங்கை அதுவும் ரஜினிகாந்த் நடிக்கும் முக்கியமான காட்சியை பொது இடத்தில் மக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் வைத்து ஷூட் செய்தாராம். அவரை பார்ப்பதற்கு கூட்டம் கூடும் என்பதை தெரிந்தும் இந்த ரிஸ்க்கை எடுத்த நெல்சன் எந்த பிரச்னையும் இல்லாமல் ஷூட்டிங்கை முடித்துவிட்டாராம்.
நெல்சனை பாராட்டிய ரஜினிகாந்த்?: அது தயாரிப்பு தரப்புக்கும், ரஜினிக்கும் ரொம்பவே பிடித்துப்போய்விட்டதாகவும், அவரை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. நெல்சனின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்திதான். அதேபோல் தெளிவாகவும் ஷூட்டிங்கை முடித்திருக்கிறாரே; செம டேலண்ட்தான் போங்க என்று ஃபேன்ஸ் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கூலி படம் இந்த மாதம் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











