என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம்…என்ன எனர்ஜி…!!! ரஜினியை சந்தித்த இயக்குனர்!
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.
சென்னை: இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் கோலமாவு கோகிலா திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், அவருக்கு படம் மிகவும் பிடித்ததாகவும், சிரித்து சிரித்து ரசித்ததாகவும் நெல்சனுக்கு போன் செய்து பாராட்டினார். அந்த மகிழ்ச்சியை நெல்சன் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.
இப்போது ரஜினிகாந்தை நேரில் சந்தித்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் நெல்சன். மிகச்சிறந்த தருணம். என்ன ஒர் எனர்ஜி... உங்களுடைய பாராட்டுகளுக்கும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்கும் நன்றி சார் என ட்வீட் செய்துள்ளார்.
நயன்தாரா யோகிபாபு நடித்துள்ள கோலமாவு கோகிலா திரைப்படம் மிகச்சிறந்த நகைச்சுவை படமாக வெளியாகியுள்ளது. நயன்தாராவின் நடிப்பு, யோகிபாபுவின் நகைச்சுவை, நெல்சனின் திரைக்கதை என எல்லாம் ஒருசேர பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் உள்பட பலரும் இப்படத்தை பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











